ஆகஸ்ட் 2-ல் ரெடியாகுங்க.... சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடக்குது!!

Posted By:

சென்னை: சென்னையில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வாங்கித் தரும் நல்ல நோக்கத்தோடு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை சார்பில் இளைஞர்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டியில் உள்ள ஒலிம்பியா தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் ("டெக் பார்க்') நடைபெறவுள்ளது.

ஆகஸ்ட் 2-ல் ரெடியாகுங்க.... சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடக்குது!!

ஆகஸ்ட் 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பம், பொறியியல், நிதி, காப்பீடு போன்ற துறைகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

இதில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

பிளஸ் 2 வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்புகள் படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம்.

இதுகுறித்து மேலும் தகவல் பெற www.ryabookbank.com என்ற இணையதள முகவரியிலும், 044-25610369, 25610978 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.

ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Rajasthan Youth Foundation has arranged a job mela which will be held in Chennai August 2. For more details youths can logon into www.ryabookbank.com.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia