கோவையில் வேலைவாய்ப்பு முகாம்: ஜனவரி 10-ல் தமிழக அரசு நடத்துகிறது!!

Posted By:

சென்னை: தமிழக அரசு சார்பில் கோவையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

25 ஆயிரம் பணியாளர்கள் இந்த முகாமில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

பணியாளளர்களை தேர்வு செய்ய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ஜனவரி 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கோவையில் வேலைவாய்ப்பு முகாம்: ஜனவரி 10-ல் தமிழக அரசு நடத்துகிறது!!

இதில் கோவை, ஓசூர், ஈரோடு, திருப்பூர், சேலம், சென்னையிலிருந்து 500-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. பங்கேற்பதற்கு அனுமதி இலவசம்.

மொத்தம் தேர்வு செய்யப்பட உள்ள காலியிடங்கள்: 25,000

பங்கேற்கும் நிறுவனங்கள்: IT Software, Core, BPO, Marketing, IT Hardware உள்பட் பல்வேறு துறைகளை சார்ந்த மிகப்பெரிய 500க்கும் மேற்பட்ட முன்னோடி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் படித்த இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

தகுதி: 10, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ, பி.டெக், பி.எஸ்சி, பி.காம், பி.ஏ, பி.பி.ஏ, எம்.எஸ்சி, எம்சிஏ, எம்பிஏ, எம்.இ, எம்.டெக், மருத்துவம் சார்ந்த படிப்புகள், கணினி பயிற்சி போன்ற எந்தவொரு துறையில் பட்டயம், பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்களும் கலந்துகொள்ளலாம்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 10.1.2016 அன்று காலை 8 மணி முதல் மாலை 6.15 மணி வரை

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Sri Krishna College of Engineering and Technology,

Palakkad main Road, Kuniamuthur, Coimbatore, Tamil Nadu - 641 008.

வேலை தேடும் இளைஞர்கள் இந்த முகாமைப் பயன்படுத்திப் பயன்பெறலாம் என அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu Government will conduct a job fair in Coimbatore city on Jan 10. Students will participate in the fair which will conducted in Sri Krishna College of Engineering and Technology, Palakkad main Road, Kuniamuthur, Coimbatore.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia