108 ஆம்புலன்ஸில் ஓட்டுநர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

Posted By:

சென்னை: தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டுநர், அவசரகால மருத்துவப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பணியிடங்களை நிரப்ப ஜனவரி 12-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

108 ஆம்புலன்ஸில் ஓட்டுநர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு பி.எஸ்சி. நர்சிங், ஜி.என்.எம், ஏ.என்.எம்., மருந்தாளுநர் பட்டயப்படிப்பு, டிஎம்எல்டி அல்லது அறிவியல் சார்ந்த இளங்கலைப் பட்டப்படிப்பு படித்திருக்வேண்டும். 30 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் இருபாலரும் முகாமில் கலந்து கொள்ளலாம்.

ஓட்டுநர் பணியிடங்களுக்கு 24 வயது முதல் 35 வயதுக்கு உள்பட்ட இலகுரக ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களாக இருக்கவேண்டும். மேலும் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களாக இருக்கவேண்டும்.

உயரம் 162.5 செ.மீ.க்கும் குறையாமல் உள்ள ஆண்கள் இதில் கலந்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.

திருத்தணி அரசு மருத்துவமனை வளாகத்தில் முகாம் நடைபெறும். இதில் பங்கேற்பவர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களைக் கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-2888 8060 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Job fair will be held in Tirutani Government hospital complex. 108 Ambulance drivers, Medical assistants can participate in fair which will be held on Jan 12.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia