புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்,டி., எம்.எஸ். படிக்க ஆசையா....!!

Posted By:

புதுடெல்லி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலுள்ள ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆஃப் போஸ்ட் கிராஜுவேட் மெடிக்கல் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் (ஜிப்மர்) இன்ஸ்டிடியூட்டில் எம்.டி, எம்.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

எம்பிபிஎஸ் படிப்பு அல்லது அதற்கு ஈடான படிப்பு படித்தவர்கள் இந்தப் படிப்பில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். மேலும் மத்திய, மாநில மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்திருக்கவேண்டும்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்,டி., எம்.எஸ். படிக்க ஆசையா....!!

படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஜிப்மர் இன்ஸ்டிடியூட் இணையதளத்துக்குச் சென்று ஆன்-லைனில் விண்ணப்பம் செய்யவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,200 வசூலிக்கப்படும். எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர் ரூ.800 செலுத்தினால் மட்டும் போதுமானது. இந்தத் தொகையை நெட் பேங்க்கிங், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் செலுத்தலாம்.

இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 20-ம் தேதி கடைசி நாளாகும். தேர்வுகள் மே 15 -ம் தேதி நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு http://jipmer.edu.in/ என்ற இணையதளத்துக்கு சென்று பார்க்கலாம்.

English summary
Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER), Puducherry has invited applications for admission into MD/MS Programmes. Admissions are offered in Doctor of Medicine (MD) and Master of Surgery (MS) programmes in various disciplines for the academic session 2016. Eligibility Criteria: Candidates should have passed MBBS, or its equivalent qualification, from a university/institute recognised by the Medical Council of India (MCI) Candidates should have either completed, or due to complete, one year rotatory internship training on or before 30-06-2016 are also eligible to apply Candidate must be registered with Central / State Medical Registration Council

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia