ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு நாளை மறுநாள்... டாக்டராக ரெடியா?

Posted By:

புதுச்சேரி : ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 27 முதல் மே 3ந் தேதி வரை ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் உள்ள 200 இடங்களுக்கு நாளை மறு நாள் ஜூன் 4ந் தேர்வு நடைபெற உள்ளது.

புதுச் சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு 150 இடங்களும், காரைக்கால் கிளைக்கு 50 இடங்களும் மொத்தம் 200 இடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன.

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் உள்ள 200 இடங்களை நிரப்ப ஜூன் 4ந் தேதி தேர்வு நடைபெறுகிறது. இதில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

ஜிப்மர் நுழைவுத் தேர்வு

எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு மாணவ மாணவிகள் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்படுகிறார்கள். ஜிப்மர் மருத்துவமனையில் சேர நீட் தேர்வு அவசியம் இல்லை. ஜிப்மர் நுழைவுத் தேர்வு மட்டும் எழுதினால் போதும்.

75 நகரங்களில் தேர்வு

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் உள்ள 200 இடங்களை நிரப்ப ஜூன் 4ந் தேதி தேர்வு நடைபெறுகிறது. இந்த எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வுக்கு 1,89,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். புதுச்சேரி, சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், ஹைதராபாத் ஆகிய 75 நகரங்களில் உள்ள 270 மையங்களில் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

200 காலியிடங்கள்

புதுவையில் உள்ள 150 இடங்களில் பொதுப்பிரிவினருக்கு 50 இடங்களும், பிற்படுத்தப்பட்டோருக்கு 28 இடங்களும், தாழ்த்தப்பட்டோருக்கு 16 இடங்களும், பழங்குடியினருக்கு 11 இடங்களும், புதுவை மாநிலத்திற்கு 40 இடங்களும், வெளிநாடு வாழ் இந்தியருக்கு 5 இடங்களும், ஒதுக்கப்பட்டுள்ளன. காரைக்காலில் உள்ள 50 இடங்களில் பொதுப்பிரிவினருக்கு 15 இடங்களும், பிற்படுத்தப்பட்டோருக்கு 10 இடங்களும், தாழ்த்தப்பட்டோருக்கு 6 இடங்களும், பழங்குடியினருக்கு 4 இடங்களும், புதுவை மாநிலத்திற்கு 14 இடங்களும், வெளிநாடு வாழ் இந்தியருக்கு 1 இடமும், ஒதுக்கப்பட்டுள்ளன.

200 மதிப்பெண்களுக்கு தேர்வு

காலை 10 மணி முதல் 12.30 மணி வரைக்கும் மற்றும் மாலை 3 மணி முதல் 5.30 மணி வரைக்கும் தேர்வு நடைபெறும், காலை, மதியம் இரண்டு வேளையும் தேர்வு நடத்தப்படும். தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விகளுக்கும் 4 மதிப்பெண்கள் மொத்தம் 800 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். தேர்வில் மாணவ மாணவிகள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என மருத்துவக் கல்லூரி முதல்வர் சுவாமி நாதன் தெரிவித்துள்ளார்.

English summary
JIPMER Medical College Principal Swami nathan said that MBBS entrance test will be held on June 4, the day after tomorrow.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia