எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்க புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பிக்கலாம்

Posted By:

புதுச்சேரி : ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் 27 மார்ச் 2017 முதல் 03 மே 2017ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள மருத்துவ படிப்புக்கான இடங்களை நிரப்ப நுழைவுத் தேர்வினை ஜிப்மர் நிர்வாகம் நடத்தி வருகிறது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்க புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பிக்கலாம்

2017ம் ஆண்டிற்கான நுழைவுத் தேர்வு ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 4ம் தேதி காலையில் 10 மணி முதல் 12.30 மணி வரையிலும் மதியம் 3 மணி முதல் 5.30 மணி வரைக்கும் தேர்வு நடைபெறும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர விருப்பம் உள்ளவர்கள் 27 மார்ச் 2017 காலை 11 மணி முதல் 3 மே 2017 மாலை 5 மணி வரைக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு புதுச்சேரி, சென்னை, ஹைதராபாத், திருவனந்தபுரம், பெங்களூர் உள்பட 75 நகரங்களில் 270 மையங்களில் நடைபெறவுள்ளது. இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கல்லூரியில் சேர்க்கப்படுவார்கள்.

இதற்கான விண்ணப்பங்களை விண்ணப்பதாரர்கள் ஜிப்மரின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.jipmer.edu.in என்ற இணையதளத்னின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என ஜிப்மர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
JIPMER (Jawaharlal Institute Postgraduate Medical Education & Research) is one of the premier institutions in the field of medical education in India. Jipmer 2017 - 2018 Admission last date to submit the application form is by May 3 (5 pm).

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia