ஜே.இ.இ. தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Posted By:

சென்னை: 2016-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கு (ஜே.இ.இ.) ஜனவரி 11 வரை ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கல்வி நிறுவனப் படிப்புகளில் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வானது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில்(சி.பி.எஸ்.இ.) சார்பில் முதல் நிலைத் தேர்வும், முதன்மைத் தேர்வும் நடத்தப்படுகிறது.

ஜே.இ.இ. தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்றவற்றில் சேரலாம். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றால் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி. கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.

2016-ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. பிரதானத் தேர்வு அறிவிப்பு கடந்த நவம்பர் இறுதியில் வெளியிடப்பட்டது. அப்போது சிபிஎஸ்இ நிர்வாகம் சார்பில், தேர்வுக்கு டிசம்பர் 31 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜனவரி 11-ஆம் தேதி வரை சி.பி.எஸ்.இ. நீட்டித்துள்ளது. மேலும் இதற்கான தேர்வுக் கட்டணத்தை 12-ஆம் தேதி வரை மாணவர்கள் செலுத்தலாம்.

ஜே.இ.இ. எழுத்துத் தேர்வு 2016 ஏப்ரல் 3-ஆம் தேதியிலும், ஆன்-லைன் தேர்வுகள் 2016 ஏப்ரல் 9,10 ஆகிய தேதிகளிலும் நடத்தப்பட உள்ளன. கூடுதல் விவரங்களை www.jeemain.nic.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

English summary
The CBSE has extended the date of online submission of the application for JEE (Main-2016) from December 31, 2015 to January 11, 2016. The Joint Entrance Exam Main 2016 is scheduled to be conducted on April 3, 2016 (offline) and April 9 and 10, 2016 (online). Earlier only two attempts were allowed to clear the exam but now students can attempt thrice times.The registration for JEE Main 2016 began on December 1. A detailed information brochure is available at the official website.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia