டெல்லி : சிபிஎஸ்இ நடத்தும் கூட்டு நுழைவு பிரதானத் தேர்வு (ஜேஇஇ பிரதானத் தேர்வு) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தத் தேர்வு எழுதியவர்கள் சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://cbseresults.nic.in/jee/jee_2016.htm -ல் முடிவுகளைக் காணலாம்.

முடிவுகளைக் காண இணையதளத்துக்குச் செல்லவேண்டு. பின்னர் விண்ணப்ப எண், பிறந்த தேதி, பெயர் போன்ற விவரங்களைக் கொடுத்து முடிவுகளைக் காண முடியும்.
மதிப்பெண் முடிவுகளை டவுன்லோடு செய்ய கீழேயுள்ள லிங்க்கைக் கிளிக் செய்யவும்.
http://jeemain.nic.in/webinfo/Public/Home.aspx
இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எழுத முடியும். இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள், நாட்டிலுள்ள ஐஐடி, என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.
ஜேஇஇ ஆப்-லைன் தேர்வு ஏப்ரல் 3-ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 9, 10-ம் தேதிகளில் ஜேஇஇ பிரதானத் தேர்வுகள் நடைபெற்றன.
இந்தத் தேர்வு 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
அதற்கான முடிவுகளே தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதில் வெற்றி பெற்றவர்கள் மே 22-ம் தேதி நடைபெறும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை எழுதவுள்ளனர்.


Click it and Unblock the Notifications












