ஜெஇஇ மெயின் தேர்வு எழுதியிருக்கீங்களா? தேர்வு முடிவு இன்று வெளியீடு....

Posted By:

பெங்களூர் : இந்த வருடத்தின் 5வது கூட்டு நுழைவுத் தேர்வான ஜெஇஇ மெயின் தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான முடிவுகளை www.jeemain.nic.in  மற்றும் www.cbse.nic.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைன் மற்றும் ஆப் லைன் என இரண்டு முறைகளில் ஜெஇஇ மெயின் தேர்வு நடத்தப்பட்டது. ஏப்ரல் 2ம் தேதி ஞாயிற்றுக் கிழமை பேனா மற்றும் பேப்பர் பயன்படுத்தி எழுதப்படும் எழுத்துத் தேர்வும் ஏப்ரல் 8ம் தேதி மற்றும் 9ம் தேதியில் ஆன்லைன் தேர்வும் நடத்தப்பட்டது.

ஜெஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு என்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசாங்கம் மற்றும் மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) நடத்தப்டும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும்.நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (என்ஐடி), ஐஐடிகள் உட்பட மத்திய தொழில்கல்வி நிறுவனங்களில் உள்ள எஞ்சினீயரிங் படிப்பில் சேருவதற்காக இந்த பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

ஜெஇஇ மெயின் தேர்வு எழுதியிருக்கீங்களா?  தேர்வு முடிவு இன்று வெளியீடு....

தேர்வு முடிவினை இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்வது எப்படி?

கீழே உள்ள முறைப்படி அனைத்து தேர்வர்களும் தங்களது ஜெஇஇ மெயின் தேர்வு முடிவினை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

www.jeemain.nic.in மற்றும் www.cbse.nic.in என்ற இணையதளத்தை லாக் ஆன் செய்ய வேண்டும். பின்பு அதில் வரும் லிங்கை கிளிக் செய்யவும்

தேவையான அனைத்து விவரங்களையும் (பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை) உள்ளீடு செய்து பின்பு சமர்ப்பிக்க வேண்டும்.

ஜெஇஇ மெயின் தேர்வு முடிவு அங்கு காணப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை -

ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்விற்கு தகுதிசெய்யப்படுவார்கள். ஜெஇஇ மெயின் மற்றும் அட்வான்ஸ் இந்த இரண்டுக் கட்டத் தேர்விலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தரவரிசைப்படி கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும.

English summary
The jee main examination will be held by the Central Board of Secondary Education.JEE Main Exam Result Declared Today at www.jee.nic.in.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia