ஜெஇஇ மெயின் தேர்வு நுழைவுச் சீட்டு விரைவில்!

Posted By:

பெங்களூர் : இந்த வருடத்தின் 5வது கூட்டு நுழைவுத் தேர்வான ஜெஇஇ மெயின் தேர்வு ஆன்லைன் மற்றும் ஆப் லைன் என இரண்டு முறைகளில் நடத்தப்படுகிறது. ஏப்ரல் 2ம் தேதி ஞாயிற்றுக் கிழமை பேனா மற்றும் பேப்பர் பயன்படுத்தி எழுதப்படும் எழுத்துத் தேர்வு நடைபெறும். ஏப்ரல் 8ம் தேதி மற்றும் 9ம் தேதியில் ஆன்லைன் தேர்வு நடைபெறும்.

ஜெஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு என்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசாங்கம் மற்றும் மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) நடத்தப்டும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும்.நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (என்ஐடி), ஐஐடிகள் உட்பட மத்திய தொழில்கல்வி நிறுவனங்களில் உள்ள எஞ்னியரிங் படிப்பில் சேருவதற்காக இந்த ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாம் நடத்தப்படுகிறது.

ஜெஇஇ மெயின் தேர்வு நுழைவுச் சீட்டு விரைவில்!

நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்வது எப்படி?

கீழே உள்ள முறைப்படி அனைத்து விண்ணப்பதாரர்களும் நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்யவும்.

jeemain.nic.in என்ற இணையதளத்தை லாக் ஆன் செய்ய வேண்டும். பின்பு அதில் வரும் லிங்கை கிளிக் செய்யவும்

தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிடவும். பின்பு சமர்ப்பிக்க வேண்டும்.

நுழைவுச்சீட்டு அங்கு காட்டப்படும். அதனை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு அத்துடன் பிரிண்ட் எடுத்தும் வைத்துக் கொள்ளுங்கள்.

விண்ணப்பதாரர்கள் நுழைவுச்சீட்டில் உள்ள விபரங்கள் சரியாக உள்ளனவா என கவனமாகப் பார்க்கவும். அதில் பெயர், தேர்வுதாள், பிறந்த தேதி, ஜென்டர், தேர்வு மையம் பெயர், சிட்டி, மாநிலம், தகுதி குறியீடு மற்றும் நுழைவுச் சீட்டு வகை ஆகியன குறிப்பிடப்பட்டிருக்கும்.

நுழைவுச்சீட்டில் ஏதேனும் முரண்பாடுகள் காணப்பட்டால் ஜெஇஇ மெயின் செயலகத்திற்கு உடனே அறிவிக்கவும்.

விண்ணப்பதாரர்கள் தேர்வு நடக்கும் இடத்திற்கு 2மணி நேரம் 30 நிமிடத்திற்கு முன்னதாகவே செல்ல வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை -

ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் ஜெஇஇ மெயின் தேர்விற்கு தகுதிசெய்யப்படுவார்கள். ஜெஇஇ மெயின் மற்றும் அட்வான்ஸ் இந்த இரண்டுக் கட்டத் தேர்விலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தரவரிசைப்படி கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும.

முக்கியமான தேதிகள் -

ஜெஇஇ மெயின் தேர்வு ஆப்லைன் - 2017 ஏப்ரல் 2

ஜெஇஇ மெயின் தேர்வு ஆன்லைன் - 2017 ஏப்ரல் 8 மற்றும் 9.

ஜெஇஇ மெயின் தேர்வு முடிவு - 2017 ஏப்ரல் 27

மேலும் தகவல் அறிந்து கொள்ள www.jeemain.nic.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
The jee main examination will be held by the Central Board of Secondary Education for admission to Undergraduate Engineering Programmes in NITs, IIITs and other Centrally Funded Technical Institutions etc.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia