ஒரு முக்கிய அறிவிப்பு... ஜெஇஇ மெயின் தேர்விற்கான தேர்வு மையம் மாற்றம்!

ஜெஇஇ மெயின் தேர்வு இந்த வருடத்தில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் 5வது முக்கிய நுழைவுத் தேர்வாகும்.

சென்னை ; ஜெஇஇ மெயின் தேர்வு ஆன்லைன் மற்றும் ஆப் லைன் என இரண்டு முறைகளில் நடத்தப்படுகிறது. ஏப்ரல் 2ம் தேதி ஞாயிற்றுக் கிழமை பேனா மற்றும் பேப்பர் பயன்படுத்தி எழுதப்படும் எழுத்துத் தேர்வு நடைபெறும். ஏப்ரல் 8ம் தேதி மற்றும் 9ம் தேதியில் ஆன்லைன் தேர்வு நடைபெறும்.

ஜெஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு என்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசாங்கம் மற்றும் மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) நடத்தப்டும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும்.நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (என்ஐடி), ஐஐடிகள் உட்பட மத்திய தொழில்கல்வி நிறுவனங்களில் உள்ள எஞ்னியரிங் படிப்பில் சேருவதற்காக இந்த ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாம் நடத்தப்படுகிறது.

ஒரு முக்கிய அறிவிப்பு... ஜெஇஇ மெயின் தேர்விற்கான தேர்வு மையம் மாற்றம்!

ஜெஇஇ மெயின் தேர்விற்கான நுழைவுச் சீட்டு மார்ச் 14ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

அதிகாரரபூர்வ அறிவிப்பு -

2017ம் ஆண்டு நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் 5வது முக்கிய நுழைவுத் தேர்வான ஜெஇஇ மெயின் தேர்விற்கான தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது. அதுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தேர்வு நடைபெறும் நாள் - 08.04.2017 ரோல் நம்பர்கள் - 56000532 - 56000649

தேர்வு நடைபெறும் நாள் - 09.04.2017 ரோல் நம்பர்கள் 56001404 - 56001520

பழைய முகவரி -

(ரோல் நம்பர்) 560005
டிப்ளமோ விவா கல்லூரி,
பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சி - 4,
வேகல் தொழிற்பேட்டை,
என்ஆர். முலுண்டு (மேற்கு) நாகா,
தானே மேற்கு, 400604,
தானே, மகாராஷ்டிரா,

புதிய முகவரி - (ஜெஇஇ மெயின் தேர்விற்கான தேர்வு மையத்தின் சரியான முகவரி)

(ரோல் நம்பர்) 560005
விவா கல்லூரி, டிப்ளமோ இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி,
போலின்ஜ், டி மார்ட் அருகில்,
விரார் மேற்கு -401303,
தானே, மகாராஷ்டிரா,

தேர்வு மைய முகவரி மாற்றியமைக்கப்பட்டவர்களுக்கான நுழைவுச் சீட்டு மார்ச் 21ம் தேதி அலுவலக இணையதளமான jeemain.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) நடத்தப்டும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும். இந்த நுழைவுத் தேர்வு என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி மற்றும் பிற மத்திய நிதியுதவி தொழில்நுட்ப நிறுவனங்கள் பொறியியல் இளநிலைப் பட்டப்படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வாகும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை -

ஜெஇஇ மெயின் தேர்வில் வெற்றி பெறுவபவர்கள் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த இரண்டு தேர்விலும் வெற்றி பெறுபவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான வாய்ப்புகள் அளிக்கப்படும்.

முக்கிய தேதிகள் -

ஜெஇஇ மெயின் 2017 (ஆஃப்லைன்) தேர்வு - ஏப்ரல் 2

ஜெஇஇ மெயின் 2017 (ஆன்லைன்) தேர்வு - ஏப்ரல் 8 மற்றும் 9 ஆகிய நாட்களில் நடைபெறும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
This year, the 5th Joint Entrance Examination (Main) 2017 will be conducted on (Sunday) April 2 (pen and paper mode) and April 8 and 9 (online mode).
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X