ஜேஇஇ பிரதானத் தேர்வு தேதி அறிவிப்பு!!

Posted By:

சென்னை: ஜேஇஇ பிரதானத் தேர்வுக்கான தேதிகளை சிபிஎஸ்இ (CBSE) தற்போது அறிவித்துள்ளது. இது 2016-ம் ஆண்டுக்கானத் தேர்வாகும்.

இந்தத் தேர்வுகள் ஏப்ரல் 3, ஏப்ரல் 9, ஏப்ரல் 10-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வு எழுத விரும்புவோரம் 2015 டிசம்பர் 1-ம் தேதி முதல் ஆன்-லைனில் பதிவு செய்துகொள்ளலாம்.

ஜேஇஇ பிரதானத் தேர்வு தேதி அறிவிப்பு!!

இந்தத் தேர்வு எழுதி வெற்றி பெறுவோர் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க முடியும். தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 31 ஆகும்.

ஜேஇஇ பிரதானத் தேர்வு 2 தால்களைக் கொண்டு. தாள்-1 (பிஇ, பிடெக்), தாள்-2(பிஆர்க், பி.பிளானிங்) ஆகியவை 2 தாள்கள். இந்தப் படிப்புகளை படிக்க விரும்புவர்கள் 2 தேர்வுகளையும் எழுதலாம்.

ஜேஇஇ தேர்வுகள் பிரதானத் தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என இரு தேர்வுகள் நடைபெறும். இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் ஐஐடி உயர் கல்வி நிறுவனங்களில் சேர முடியும் என்பது குறி்ப்பிடத்தக்கது.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia