ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுதுவதற்கு தேவையான தகுதிகள் என்ன?

Posted By:

புது டெல்லி : நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (என்ஐடி), ஐஐடிகள் உட்பட மத்திய தொழில்கல்வி நிறுவனங்களில் உள்ள பிஇ, பிடெக் போன்ற படிப்பில் சேருவதற்காக இந்தத ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாம் நடத்தப்படுகிறது. இது ஜெஇஇ தலைமை வாரியத்தால் நடத்தப்படும் தேர்வாகும். இந்தத் தேர்வு ஜெஇஇ மெயின் தேர்வு மற்றும் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு என இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு 2017 மே 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வினை அனைத்துப் பிரிவினைச் சார்ந்ந மாணவர்களும் எழுதலாம். மற்றும் அயல் நாட்டினரும் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுதுவதற்கு தேவையான தகுதிகள் என்ன?

ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுள் முதல் 1,50,000 இடங்களில் வரும் மாணவர்கள் மட்டுமே ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுத முடியும்.

1 வயது வரம்பு: பொது பிரிவைச் சேர்ந்தவர்கள் அக்டோபர் 1 1992 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 வருடம் வயது தளர்வுக் கொடுக்கப்பட்டுள்ளது. எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்கள் அக்டோபர் 1 1987 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

2 முயற்சிகளின் எண்ணிக்கை : விண்ணப்பதாரர்கள் அதிக பட்சம் இரண்டு முறை முயற்சிக்கலாம். கடந்த ஆண்டு தேர்வு எழுதியவர்கள் இந்தத ஆண்டும் முயற்சிக்கலாம். கல்வி ஆண்டு 2014-2015ம் ஆண்டில் 12ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு தேர்வு முடிவு ஜீன் மாதத்திற்கு பின் வெளிவந்திருந்தால் அவர்களும் 2017ம் வருடத் தேர்வில் பங்கு பெறலாம். இம்ப்ரூமென்ட் தேர்வு எழுதியவர்களுக்கு ஜீன் மாதத்திற்குப் பின்பு தான் தேர்வு முடிவு வெளிவரும். எனவே அவர்களும் 2017ம் ஆண்டிற்கான தேர்வில் பங்கு கொள்ளலாம்.

3 பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு பதிவுக் கட்டணம்: Rs. 1200/- ஆகும். மற்றவர்களுக்கு பதிவுக் கட்டணம் Rs. 2400/- ஆகும்.

4 எக்சாமினேஷன் சென்டர் அவுட் சைடு இந்தியா: சார்க் நாட்டில் உள்ள அனைவருக்கும் பதிவுக் கட்டணம் USD 135 ஆகும். சார்க் நாட்டைத் தவிர மற்ற நாடுகளில் உள்ள அனைவருக்கும் பதிவுக் கட்டணம் USD 270 ஆகும்.

ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை மற்றும் இடஒதுக்கீடு :

ஜெஇஇ அட்வான்ஸ் தேர்விற்கான இடஒதுக்கீடுப் பற்றிப் பார்ப்போம்.

எஸ்சி பிரிவினருக்கு - 15%, எஸ்டி பிரிவினருக்கு - 7.5%, ஓபிசி - என்சிஎல் பிரிவினருக்கு - 27%, பொது தகுதி பட்டியலுக்கு - 50.5% இட ஒதுக்கீடும் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பிரிவினருக்கும் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் அந்தந்த பிரிவைச் சார்ந்த ஊனமுற்றோர்க்கு (pwd) - 3% இடஒதுக்கீடும் வழங்கப்படுகிறது.

ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வில் வெற்றி பெறுபவர்களுள் முதல் 2,20,000 இடங்களில் வரும் மாணவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அதைப் பற்றிய தகவல்களைக் கீழே காண்போம்.

1 பொதுப்பிரிவில் உள்ளவர்களுக்கு 1,07,767 இடங்கள் ஒதுக்கப்படுகிறது.

2 பொதுப்பிரிவில் உள்ள ஊனமுற்றோருக்கு 3,333 இடங்கள் ஒதுக்கப்படுகிறது.

3 ஓபிசி - என்சிஎல் பிரிவினருக்கு 57,618 இடங்கள் ஒதுக்கப்படுகிறது.

4 ஓபிசி - என்சிஎல் பிரிவிலுள்ள ஊனமுற்றோருக்கு 1,782 இடங்கள் ஒதுக்கப்படுகிறது.

5 எஸ்சி பிரிவினருக்கு 32,010 இடங்கள் ஒதுக்கப்படுகிறது.

6 எஸ்சி பிரிவில் உள்ள ஊனமுற்றோருக்கு 990 இடங்கள் ஒதுக்கப்படுகிறது.

7 எஸ்டி பிரிவினருக்கு 16,005 இடங்க்ள ஒதுக்கப்படுகிறது.

8 எஸ்டி பிரிவில் உள்ள ஊனமுற்றோருக்கு 495 இடங்கள் ஒதுக்கப்படுகிறது.

அனைத்துப் பிரிவைச் சார்ந்த மாணவர்களும் டாப் மெரிட் லிஸ்ட் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ரேங்க் அடிப்படையில் முதலில் வரும் மாணவ மாணவியர்களே தேர்ந்தெடுக்கப்படுவார்க்ள் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐஐடி மற்றும் ஐஎஸ்எம் தன்பாத் போன்ற உலகத்தரம் வாய்ந்தத தொழில்நுட்ப நிறுவனங்களில் உள்ள பிஇ, பிடெக், பிஆர்க், பிபிளானிங் போன்ற கோர்ஸ்களில் சேர்ந்துப் படிக்கலாம். மேலும் இது போன்ற தரம் வாய்ந்த கல்லூரிகளில் படிக்கும் போது படித்து முடிக்கும் முன்பே வளாகத் தேர்வு மூலம் மாணவர்கள் நல்ல சம்பளத்தில் நல்ல வேலையில் சேர்ந்து விடுகின்ற வாய்ப்பும் அதிகமாகக் காணப்படுகிறது.

English summary
The IIT Council has changed the eligibility criteria for JEE Advanced 2017 examination. Candidates who are aspiring for appear for the JEE Advanced have to know the eligibility norms and important dates to apply for the exam.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia