ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான பதிவு ஆன்-லைனில் தொடக்கம்....!!

Posted By:

டெல்லி: சிபிஎஸ்இ நடத்தும் கூட்டு அட்வான்ஸ்டு் பொது நுழைவுத் தேர்வுக்கான (ஜேஇஇ அட்வான்ஸ்டு) பிவு ஆன்-லைனில் தொடங்கியுள்ளது.

ஜேஇஇ நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான பதிவு ஆன்-லைனில் தொடக்கம்....!!

இந்த ஆண்டு இந்த ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வை கௌஹாத்தியிலுள்ள ஐஐடி நடத்துகிறது.

இந்தத் தேர்வுக்கான பதிவு இன்று (ஏப்ரல் 29) தொடங்கியுள்ளது. தேர்வுக்கு ஆன்-லைன் மூலமாக மட்டுமே பதிவு செய்யவேண்டும். பதிவு செய்த பின்னர் உள்ளே சென்று கேள்வித்தாள் ஹிந்தியா , ஆங்கிலமா என தேர்வு செய்யவேண்டும். பின்னர் பெயர், பிறந்ததேதி, பள்ளி போன்ற விவரங்களைத் தரவேண்டும். இதைத் தொடர்ந்து தேர்வு நடைபெறும் நகரைத் தேர்வு செய்யவேண்டும். அனைத்து பதிவுப் பணிகள் முடிந்ததும். பதிவுக் கட்டணத்தைச் செலுத்தவேண்டும். பின்னர் ஸ்கேன் செய்த சான்றிதழ்களை அப்லோட் செய்யவேண்டும்.

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி பெறுபவர்கள் ஐஐடி, ஐஎஸ்எம் கல்வி நிறுவனங்களில் சேர முடியும். இந்தத் தேர்வுகள் 2 தாள்களைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு தாளும் 3 மணி நேரம் கொண்டதாக இருக்கும். இந்தத் தேர்வு மே 22 - ம் தேதி காலை, மாலையில் நடைபெறும்.

English summary
The online registrations for the JEE Advanced has started from today i, e on April 29, 206. Indian Institute of Technology (IIT) Guwahati, the organising institute of JEE (Advanced) 2016, has opened registrations for the IIT Joint Entrance Exam (JEE) Advanced 2016. Aspirants who are interested can apply online till May 4, 2016. How to Apply? Candidates should follow the steps to apply online: Go to the official website After login, provide the basic data including the choice of the language of question paper (English or Hindi), the choices for the cities of examination Upload the scanned copies of all requisite documents Pay the registration fee. The registration fee is neither refundable nor transferable After submitting the same, candidates should take a print-out for future use

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia