ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு: முக்கிய தேதிகள் அறிவிப்பு...!!

Posted By:

டெல்லி : ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர உதவும் இணை நுழைவுத் தேர்வு அட்வான்ஸ்டுக்கான (ஜேஇஇ அட்வான்ஸ்டு) முக்கிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்வை சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகம் நடத்தி வருகிறது. ஜேஇஇ பிரதானத் தேர்வுகள் (ஆப்-லைன்) கடந்தவாரம் நடைபெற்றது. அடுத்த வாரம் ஜேஇஇ ஆன்-லைன் தேர்வுகள் நடைபெறவுள்ளன.

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு: முக்கிய தேதிகள் அறிவிப்பு...!!

இதைத் தொடர்ந்து அட்வான்ஸ்டு தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதற்கான தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகள் மே 22-ம் தேதி நடைபெறும். ஜேஇஇ பிரதானத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் இந்த அட்வான்ஸ்டு தேர்வை எடுத்த முடியும்.

ஜேஇஇ அட்வான்ஸ்டு முதல் தாள் மே 22-ம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். 2-ம் தாள் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு பதிவுக்கான தேதிகள் ஏப்ரல் 29 முதல் மே 4 வரை ஆகும். நுழைவுக் கூடச் சீட்டுகளை (ஹால்-டிக்கெட்) மே 11 முதல் மே 22 வரை டவுன்லோடு செய்துகொல்ளலாம். தேர்வு முடிவுகள் ஜூன் 12-ம் தேதி வெளியிடப்படும்.


English summary
The Joint Entrance Examination (Advanced) 2016, conducted by the seven zonal IITs under the guidance of the Joint Admission Board (JAB) declared important dates of JEE Advanced 2016. According to the scheduled dates, the exam will be conducted on May 22. Students who qualify in the JEE-Mains can appear for JEE-Advanced examination.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia