ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவு வெளியீடு.. சண்டிகார் மாணவர் முதலிடம் பிடித்து சாதனை!

Posted By:

சென்னை : ஜெஇஇ அட்வான்ஸ் நுழைவுத் தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவினை www.jeeadv.ac.in என்ற இணையதளத்திற்குச் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஜெஇஇ மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் தான் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள். ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். தரவரிசைப் பட்டியலில் இடம் பெறுபவர்கள் உலகத்தரம் வாய்ந்த இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க தகுதிபெற்றவர்கள் ஆவார்கள்.

ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவு வெளியீடு.. சண்டிகார் மாணவர் முதலிடம் பிடித்து சாதனை!

ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவினை விண்ணப்பதாரர்கள் www.jeeadv.ac.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று தங்கள் அப்ளிகேஷன் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வு முடிவு மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) என்.ஐ.டி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்காக நடைபெறும் நழைவுத் தேர்வு (ஜே.இ.இ. அட்வான்ஸ்) கடந்த மாதம் 21ந் தேதி நடைபெற்றது.

அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வுகளில் மிக கடினமான தேர்வு என கருதப்படும் இநத் தேர்வை நாடு முழுவதும் 1 லட்சத்து 59 ஆயிரத்து 540 பேர் எழுதினார்கள்.

இந்த தேர்வு முடிவு நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் 50 ஆயிரத்து 455 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். 43 ஆயிரத்து 318 மாணவர்களும், 7,137 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சண்டிகாரைச் சேர்ந்த மாணவர் சர்வேஷ் மெக்தானி 366க்கு 339 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

English summary
The jee advance examination will be held by the Central Board of Secondary Education for admission to ug Engineering Programmes in NITs, IIITs and etc.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia