ஜேக்டோ ஜியோ: 1,111 ஆசிரியர்களை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவு!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை, மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பணியில் சேர்க்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை, மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பணியில் சேர்க்க பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

ஜேக்டோ ஜியோ: 1,111 ஆசிரியர்களை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவு!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரையில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்தால் 1,111 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஓர் சில ஆசிரியர்கள் பணியிட மாற்றமும் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டு பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வரமுருகன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-

காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது மேல்நிலை வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்கப்படவுள்ளதாலும், பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்புகளுக்கான அரசுப் பொதுத் தேர்வுகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையிலும், மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்துவது குறித்து மறு ஆய்வு செய்து எடுக்கப்படவுள்ள ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Jacto Geo Protest Issues Teachers Suspension Cancelled TN Govt
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X