ஜம்மு-காஷ்மீர் காவல்துறையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்!

Posted By:

சென்னை: ஜம்மு-காஷ்மீர் காவல்துறையில் 4 ஆயிரம் காவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதப்படை பிரிவுக்கு 3 ஆயிரம் போலீஸாரும், மற்ற துறைக்கு 1000 போலீஸாரும் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான அறிவிப்பை ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அறிவித்துள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடத்துக்கு அக்டோபர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 25 வயதுக்குள் இருக்கலாம்.

தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் அனுப்பவேண்டும். இந்தப் பணியிடங்களில் சேர விரும்புவோர் மெட்ரிக்குலேஷன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்காக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இணையதளத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.jkpolice.gov.in-ல் தொடர்புகொள்ளலாம்.

English summary
Jammu & Kashmir Police invited applications for 4000 Executive & Armed Police Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 15 October 2015. Jammu & Kashmir Police Admit Card for J&K Police Recruitment Executive & Armed Police Posts Details in this regard can be found from the official website. Result of J&K Police Recruitment Executive & Armed Police Posts Details in this regard can be found from the official website. Last Date of Submission of Application: 15 October 2015.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia