டிரேட் புரமோஷன் அமைப்பில் மூத்த மேலாளர் வேலை!!

Posted By:

சென்னை:இந்தியா டிரேட் புரமோஷன் ஆர்கனைசேஷனில் (ஐடிபிஓ) மூத்த மேலாளர் (பாதுகாப்பு), மேலாளர் (பாதுகாப்பு) பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதுதொடர்பான அறிவிப்பு வந்த 30 நாள்களுக்குள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டிரேட் புரமோஷன் அமைப்பில் மூத்த மேலாளர் வேலை!!

ஐடிபிஓ அமைப்பானது டெல்லியின் பிரகதி மைதானில் அமைந்துள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது இந்த அமைப்பு. நாட்டின் வெளிநாட்டு வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பில்தான் மூத்த மேலாளர், பாதுகாப்பு பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு (மூத்த மேலாளர், மேலாளர்) பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மேலும் ராணுவம், காவல்துறை, ரிசர்வ் போலீஸ், எல்லைப் பாதுகாப்புப் படை, இதர ராணுவப் படைகள் இவற்றில் ஏதாவது ஒன்றில் குறைந்தது 10 வருடம் வேலை பார்த்த அனுபவம் இருக்கவேண்டும். வயது மூத்த மேலாளர் பணியிடத்துக்கு 40 வருடங்களுக்கு மிகாமலும், மேலாளர் பதவிக்கு 35 வருடங்களுக்கு மிகாமலும் இருக்கவேண்டும்.

விருப்பமும், தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். சுய விலாசமிட்ட உறையுடன் Sh. H.P. Dharod, Sr. Manager (Admn), India Trade Promotion Organisation, Room No. 208, Pragati Bhawan, New Delhi-110 001 என்ற முகவரிக்கு அடுத்த 30 நாள்களுக்குள் அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு http://www.indiatradefair.com என்ற இணையதள முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia