டிப்ளமோ என்ஜீனியரிங் படித்திருக்கிறீர்களா.. ஐடிஐ லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Posted By:

சென்னை : டிப்ளமோ என்ஜீனியரிங் மற்றும் என்ஜீனியரிங் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ஐடிஐ லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அசிஸ்டண்ட் எக்சிகியூட்டிவ் என்ஜீனியர்ஸ் மற்றும் டிப்ளமோ என்ஜீனியர்ஸ் பதவிக்கு 65 காலியிடங்கள் உள்ளதாக ஐடிஐ லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 28 ஏப்ரல் 2017ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

டிப்ளமோ என்ஜீனியரிங் படித்திருக்கிறீர்களா.. ஐடிஐ லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலை - அசிஸ்டண்ட் எக்சிகியூட்டிவ் என்ஜீனியர்ஸ் மற்றும் டிப்ளமோ என்ஜீனியர்ஸ்

கல்வித்தகுதி - பி.இ., பி.டெக், டிப்ளமோ

மொத்த காலியிடங்கள் - அசிஸ்டண்ட் எக்சிகியூட்டிவ் என்ஜீனியர்ஸ் - 38 , டிப்ளமோ என்ஜீனியர்ஸ் - 27

பணியிடம் - இந்தியா முழுவதும்

அசிஸ்டண்ட் எக்சிகியூட்டிவ் என்ஜீனியர்ஸ் பணிக்கான விரிவான தகுதிகள்

எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ அண்ட் கம்யூனிகேசன் படிப்புகளில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சார்ந்தவர்கள் சிவில் அல்லது மெக்கானிக்கல் பிரிவில் 65% மார்க்குகளுடன் தேர்ச்சி பெற்றுஇருக்க வேண்டும்.

எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 63% மார்க்குகளுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். மேலும் கேட் தேர்வு எழுதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். எஸ்சி எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 வருடமும், பொது மற்றும் ஜெனரல் பிரிவைச் சார்ந்தவர்களுக்கு 3 வருடமும் வயது வரம்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் பிரிவில் - 26 காலிப்பணியிடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் - 6 காலிப்பணியிடங்களும், மெக்கானிக்கல் பிரிவில். 4 காலிப்பணியிடங்களும், சிவில் பிரிவில் 2 காலிப்பணியிடங்களும் உள்ளன.

டிப்ளமோ என்ஜீனியர்ஸ் பணிக்கான விரிவான தகுதிகள்

எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் பிரிவில் டிப்ளமோ படிப்பினை முடித்திருக்க வேண்டும்.

பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சார்ந்தவர்கள் 60% மார்க்குகளுடன் தேர்ச்சி பெற்றுஇருக்க வேண்டும்.

எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 58% மார்க்குகளுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். எஸ்சி எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 வருடமும், பொது மற்றும் ஜெனரல் பிரிவைச் சார்ந்தவர்களுக்கு 3 வருடமும் வயது வரம்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் பிரிவில் - 18 காலிப்பணியிடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் - 5 காலிப்பணியிடங்களும், மெக்கானிக்கல் பிரிவில். 2 காலிப்பணியிடங்களும், சிவில் பிரிவில் 2 காலிப்பணியிடங்களும் உள்ளன.

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 28ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ்களை அத்துடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மே மாதம் 3ம் தேதி விண்ணப்பங்கள் சென்றடைவதற்கு கடைசி தேதியாகும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

துணை வட்டார வளர்ச்சி அலுவலர். பொது மேலாளர்-எச்.ஆர்,
ஐடிஐ லிமிடெட்,
சுல்தான்பூர் சாலை,
ராபெர்லி (உ.பி.) -229010

மேலும் தகவல்களுக்கு www.itiltd-india.com என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
ITI Limited Recruitment 2017 Scheduled for the post of Graduate Engineers, Diploma Engineers.Last date of the receipt of on line application 28/04/2017 and receipt of hard copies of application along with copies of certificates on 03/05/2017

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia