இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தற்போது பள்ளி மாணவர்களுக்கு ஆராய்ச்சி ஆர்வத்தைத் தூண்டும் வகையில், சிறப்பு இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம் (Young Scientists Programme) நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த பயிற்சியானது வரும் 2020 மே மாதம் 11ம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு இன்று முதல் (பிப்.,03) www.isro.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொடங்கியுள்ளது.
இந்த இளம் விஞ்ஞானி பயிற்சியில் எட்டாம் வகுப்பு முடித்து தற்போது 9-ம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் ஆர்வம், கல்வித் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்துக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கிராமப்புற மாணவர்களுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். பயிற்சி திட்டத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்கள், மாநில வாரியாக மார்ச் மாதம் இறுதியில் அறிவிக்கப்படும்.
பயிற்சி மையங்கள்
இந்த இளம் விஞ்ஞானி பயிற்சியானது அகமதாபாத், பெங்களூரூ, ஷில்லாங், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் இஸ்ரோ ஆராய்ச்சி நிறுவனத்தில் வைத்து நடத்தப்படும்.
இதில் விண்வெளி என்றால் என்ன? அடிப்படை அறிவியல் கோட்பாடுகள், விண்கலங்களின் செயல்பாடுகள் மற்றும் பயன்பாடுகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை அறிவியலும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படும்.
இந்த ISRO Yuvika 2020 பயிற்சி திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு தொலைதூரத்தில் காணும் ராக்கெட், விண்கலம் ஆகியவற்றை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். மேலும், வான்வெளி ஆராய்ச்சி மீதான ஆர்வமும் அதிகரிக்கும். பயிற்சி முடிந்ததும் அதற்கு உரியச் சான்றிதழ்களும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த பயிற்சியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ள மாணவர்கள் www.isro.gov.in என்னும் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். இது குறித்த மேலும் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.