இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்திற்கு முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ISRO எனும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானி பயிற்சி திட்ட வகுப்புகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த பிப்ரவரி 3ம் தேதி முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியது.
இதில், தமிழகம் உள்ளிட்டு நாடு முழுவதும் இருந்து ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் YUVIKA திட்டத்திற்கு விண்ணப்பித்தனர். இந்நிலையில், தற்போது ISRO YUVIKA 2020 பயிற்சிக்கு முதல் கட்டமாகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இதற்கு விண்ணப்பித்த மாணவர்கள், தங்களுடைய முடிவுகளை www.isro.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இதனைத் தொடர்ந்து இறுதி முடிவுகள் மார்ச் 31 ஆம் தேதி வெளியிடப்படும். மாணவர்கள் தங்களுக்கான கல்வி சான்றிதழ், கற்றல் திறன் உள்ளிட்ட விவரங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ISRO YUVIKA 2020 விண்ணப்பித்தவர்கள் தங்களுடைய தெரிவு பட்டியலை நேரடியாகக் காண https://www.isro.gov.in/sites/default/files/yuvika_2020_provisional_selection_list.pdf எனும் லிங்க்கை கிளிக் செய்யவும்.