சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் (இஸ்ரோ) இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்கள் உள்ளிட்ட பணிகள் காலியாகவுள்ளன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 22-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்கள் 8-ம், ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள் 9-ம் காலியாகவுள்ளன.

வேலைக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியமர்த்தப்படுவார்கள். இளநிலை ஆராய்ச்சி பணியிடங்களுக்கு எம்.எஸ்சி படித்திருக்கவேண்டும். எம்.டெக் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவியல் அல்லது தொழில்நுட்பப் பிரிவில் பிஎச்.டி முடித்திருக்கவேண்டும். இஸ்ரோ நடத்தும் நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே பணியில் சேர முடியும். விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் இணைத்து பிப்ரவரி 22-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு இஸ்ரோவில் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.isro.gov.in/-ல் காணலாம்.


Click it and Unblock the Notifications

