எம்.டெக் பயில அழைக்கிறது மைசூர் ஐஎஸ்ஐஎம்

Posted By:

சென்னை: மைசூரிலுள்ள இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் இன்பர்மேஷன் மேனேஜ்மெண்ட்(ஐஎஸ்ஐஎம்) கல்வி நிறுவனத்தில் எம். டெக் படிப்பு பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2015-2017-ம் ஆண்டு கல்வியாண்டுக்கான படிப்பாகும் இது. பி.இ. பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் படிப்பைப் பயிலலாம். எந்தப் பிரிவிலும் பட்ட மேல்படிப்பு படித்தவர்களும் இந்தப் படிப்பை பயல முடியும்.

எம்.டெக் பயில அழைக்கிறது மைசூர் ஐஎஸ்ஐஎம்

ஐஎஸ்ஐஎம் கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பம் செய்யலாம். விண்ணபப்பத்துக்காக ரூ.500-ஐ கேட்புக் காசோலையாக விண்ணப்பத்துடன் அனுப்பவேண்டும்.

சிஏடி, எம்ஏடி, கேட், பிஜிசிஇடி தேர்வு எழுதியவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி செப்டம்பர் 8 ஆகும். நுழைவுத் தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு கல்வி நிறுவனத்தின் இணையதளமான http://www.isim.ac.in-ல் தொடர்புகொள்ளலாம்.

English summary
International School of Information Management (ISiM), Mysore has invited application for admission into Master of Technology (M.Tech) in Information Systems and Management programme. Admission is offered for the session 2015-17. Eligibility Criteria: Candidate who holds graduation in B.E can apply. Candidates with master degree in any discipline are also eligible to apply

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia