தமிழக பள்ளிகளின் வளர்ச்சி மேம்பாட்டுக்கு உருதுணையாக இருந்த கல்வித்துறை செயலர் மாற்றமா

Posted By:

தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மாற்றம் குறித்து தமிழக அரசு முடிவெடுத்துள்ளாதாக தகவல்  தமிழ்கத்தின் கல்வித்துறை செயலராக மேமாதம் டி.உதயச் சந்திரனை பணியிடமாற்றமாகி கல்வித்துறை செயலராகப் பதவியேற்றார்.

தமிழக பள்ளி கல்வித்துறை செயலர் இடமாற்றத்திற்க்கான அழுத்ததை மீறி ஆதரவு பெறுகிறார்

பள்ளி கல்வித்துறையில் டி.உதயசந்திரன் அவர்கள் பதிவியேற்ற நாள் முதல் அதிரடி நடவடிக்கையினை மேற்கொண்டார். பள்ளியில் பொதுதேர்வு தரவரிசை பட்டியலை நீக்கினார் . பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த ஊரக பள்ளிகளை கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டார் . பள்ளிகளில் ஆர்ட் கேலரிகள் அமைத்து மாணவர்களுக்கு பழங்கால பெருமைகள் குறித்து அறிய ஏற்பாடுகள் செய்தார் .

தமிழக பள்ளி கல்வித்துறை செயலர் இடமாற்றத்திற்க்கான அழுத்ததை மீறி ஆதரவு பெறுகிறார்

பிளஸ் 1 வகுப்புக்கு பொதுதேர்வு முறையை கொண்டு வந்தார். பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு அதிகமாக உள்ள பள்ளிகளின் ஆசிரியர்களை இடமாற்றம் செய்தார் . பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்தரத்தை அதிகப்படுத்த புதிய பாடத்திட்டங்களை கொண்டுவர குழு அமைத்தார். பள்ளிகளில் மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் முறைக்கு கைகொடுத்தார். தற்பொழுது   பள்ளிகளின் கட்டமைப்பை சரி செய்து மாணவர்கள் படிக்க ஸ்மார்ட் வகுப்புகள் அமைத்து தருதல் வரை பல்வேறு திட்டங்களை முன்வைத்து செயல்படுத்தி வருகிறார் பள்ளி கல்வித்துறை செயலர்       டி.உதசந்திரன் மேலும் பொருப்பேற்ற ஐந்து மாதகாலத்திற்க்குள்  100 மேல்நிலை பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாவும் , 150 நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திய பெருமை அவரையே சாரும்.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக பள்ளிகளை தரம் உயர்த்தி தனியார் பள்ளிகளை சற்று கலக்கமடைய செய்தார். ஆதலால் இவரை இடமாற்றம் செய்ய வைக்க பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் வந்தவண்ணமுள்ளன. தனியார் பள்ளிகளின் சேர்க்கை  வீழ்ச்சியடையுமோ என்ற அச்சத்துடன் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன . இதனால் இவரை இடமாற்றம் செய்ய அழுத்தம் கொடுக்கின்றனர் . ஆனால் இவர் இப்போது இடமாற்ற்ப் பட்டால் தமிழ்நாட்டு பாடத்திட்டங்களின் மாற்றத்தில் தரம் வீழ்ச்சியடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் பல்வேறு ஆக்கபூர்வ நடவடிக்கைகள் முழுமையடையாமல் நின்றுபோகும் நிலைவரும் என பல்வேறு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது .

சார்ந்த பதிவுகள்:

மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே பொதுதேர்வு எழுதலாம் என அறிவிப்பு!!! 

அடடே!!,, இமேஜ் மேங்கில் பாடங்களை கற்கபோகும் தமிழகப் பள்ளி மாணவர்கள் !!! 

தமிழ்நாட்டு பள்ளிகளில் பழமை ஆர்ட் கேலரிகள் அமைக்க அரசு ஆணை

 ஆசிரியர்கள் பற்றாகுறை போக்கி தேவையான ஆசிரியர்களை இடமாற்ற முடிவு 

English summary
above article tell about transferring secretary of tamilnadu schools

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia