ரயில்வே நிறுவனத்தில் வேலை செய்ய என்ஜினீயர்களுக்கு அழைப்பு!!

Posted By:

சென்னை: ரயில்வே கட்டுமான நிறுவனமான இர்கான் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் பணிபுரிய என்ஜினீயர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ள என்ஜினீயர்கள் இர்கான் ரயில்வே நிறுவன இணையதளத்துக்குச் சென்று அடுத்த ஆண்டு ஜனவரி 2-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.

ரயில்வே நிறுவனத்தில் வேலை செய்ய என்ஜினீயர்களுக்கு அழைப்பு!!

இர்கான் நிறுவனமானது 1956-ல் உருவாக்கப்பட்டது. மத்திய அரசின் கம்பெனி சட்டத்தின் கீழ் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. முழுக்க முழுக்க மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமாகும் இது. ரயில்வே துறைக்குத் தேவையான கருவிகள், பொருட்களை உருவாக்கித் தருகிறது. ரயில்வே துறைக்குத் தேவையான கட்டுமானங்களையும் உருவாக்கித் தருகிறது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனத்தில் தற்போது மொத்தம் 30 காலியடங்கள் உருவாகியுள்ளன. உதவி மேலாளர், உதவி என்ஜினீயர், ஜூனியர் என்ஜினீயர், செக்ஷன் ஆபீஸர், உதவி ஆபீஸ் சூப்பிரடெண்ட், டெக்னீஷியன் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 2-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும். செய்த பின்னர் விண்ணப்பத்தின் மற்றொரு நகலை, Joint General Manager/ HRM, Ircon International Limited, C-4, District Centre, Saket, New Delhi என்ற முகவரிக்கு ஜனவரி 9-ம் தேதிக்குள் அனுப்பித் தரவேண்டும்.

கல்வித் தகுதி, வயதுத் தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு http://www.ircon.org என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
IRCON International Limited, Ministry of Railway invited applications from eligible candidates for 30 posts of Junior Engineer/ Civil and other posts. Eligible candidates can apply online in prescribed format on Website on or before 02 January 2016.Ircon International Limited is an engineering and construction company, specialized in transport infrastructure. The company was established in 1976, by the Government of India under the The Companies Act, 1956. IRCON was registered as the Indian Railway Construction Company Limited, a wholly owned entity of the Ministry of Railways.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia