சிவில் என்ஜீனியர்களுக்கு இர்கான் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

Posted By:

சென்னை : இர்கான் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு சிவில் என்ஜீனியர்கள் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 5 ஏப்ரல் 2017ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனம் இர்கான். பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்த நிறுவனத்தில் தற்போது கூடுதல் பொது மேலாளர், இணை பொது மேலாளர், துணை பொது மேலாளர், துணை மேலாளர் மற்றும் நிர்வாக அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் என்ஜீனியர்களுக்கு இர்கான் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

கல்வித்தகுதி -

பி.இ. பி.டெக். (சிவில்) பட்டப்படிப்பு படித்தவர்கள், டிப்ளமோ சிவில் என்ஜீனியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு -

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பில் வித்தியாசம் காணப்படும். வயது வரம்பு பற்றிய விபரங்களை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதிகபட்சம் 50 வயது உடையவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை -

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

விண்ணப்பக்கட்டணம் -

சில பணிகளுக்கு ரூ.500/-, சில காலிப்பணியிடங்களுக்கு ரூ. 1000/- கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி. எஸ்டி பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள் ரூ.250/- விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை -

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளத்தில் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். சமர்ப்பித்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் சான்றிதழ் நகல்களை இணைத்து கீழே உள்ள முகவரிக்கு 5 ஏப்ரல் 2017ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். சில பணிகளுக்கு நேர்காணல் 6 ஏப்ரல் 2017ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

ஜிஎம் / மனித வள மேலாண்மை,
இர்கான் இண்டர்நேஷனல் லிமிடெட்,
சி -4, மாவட்ட மையம்,
சாகெத், டெல்லி -110 017

மேலும் விபரங்களுக்கு www.ircon.org என்ற இணையதள முகவரியை சென்றுப் பார்க்கவும்.

English summary
Ircon Recruitment 2017. Apply online for 118 Executive, Non Executive & CSR Manager posts. Candidates will be selcted based written exam and/ or interview.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia