சிண்டிகேட் வங்கியில் புரொபேஷனரி அதிகாரியாக பணிபுரிய ஒரு வாய்ப்பு!

Posted By:

சென்னை: தேசியமயமாக்கப்பட்ட வங்கியான சிண்டிகேட் வங்கியில் புரொபேஷனரி அதிகாரியாக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது.

நாட்டிலுள்ள மிகப் பழமையான வங்கிகளில் சிண்டிகேட் வங்கியும் ஒன்று. வர்த்தக வங்கியாக இருந்த சிண்டிகேட் 1969-ல்தேசியமயமாக்கப்பட்டது.

சிண்டிகேட் வங்கியில் புரொபேஷனரி அதிகாரியாக பணிபுரிய ஒரு வாய்ப்பு!

தற்போது இந்த வங்கியில் 600 புரொபேஷனரி அதிகாரிகளை நியமிக்கவுள்ளனர்.

மணிப்பால் குளோபல் எஜுகேஷன் சர்வீஸஸ், நிட்டே எஜுகேஷன் இன்டர்நேஷனல் நிறுவனம் ஆகியவற்றில் பேங்க்கிங் அண்ட் ஃபைனான்ஸ் பி.ஜி. டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு டிசம்பர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

பட்டப்படிப்பில் 60 சதவீத தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். வயது 20 முதல் 28-க்குள் இருக்கவேண்டும். தகுந்த ஆவணங்களுடன் இந்த வேலையிடங்களுக்கு டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆன்-லைனில் விண்ணப்பம் செய்யவேண்டும்.

விண்ணப்பித்தவர்கள் தங்களது கால் லெட்டரை ஜனவரி 21-ம் தேதிமுதல் டவுன்லோடு செய்துகொள்ளலாம். இதற்கான ஆன்-லைன் தேர்வு பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறும் எனத் தெரிகிறது.

மேலும் விவரங்களுக்கு http://www.syndicatebank.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Syndicate Bank invited applications for recruitment to 600 posts of Probationary Officers through admission to the 01 year Post Graduate Diploma in Banking and Finance course in Manipal Global Education Services Pvt Ltd. Bangalore (MaGE) and Nitte Education International Pvt Ltd. Greater Noida (NEIPL). The eligible candidates can apply to the post through the prescribed format on or before 31 December 2015.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia