வேலை வாய்ப்பு சார்ந்த புதிய முதுநிலை பட்டய படிப்புகள் அறிமுகம்..! மனோன்மணிம் சுந்தரனார் பல்கலையில்

Posted By:

சென்னை : மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு சார்ந்த புதிய முதுநிலை பட்டய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்குமாறும் பதிவாளர் ஜான் டி பிரிட்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2017-2018ம் ஆண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் புதியதாக
தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறையின் சார்பில் முதுநிலை பட்டய படிப்பாக எம்.எஸ்.சி சைபர் செக்யூரிட்டி இரண்டு ஆண்டு முழு நேர படிப்பு தொடங்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் கணிதத்துறை, காவல் துறை, ராணுவ பாதுகாப்பு துறை மற்றும் குற்றவியல் போன்ற பல்வேறு துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. மேலும் தலைமை பாதுகாப்பு அதிகாரி, ரகசிய குறியீட்டாளர், தகவல் பாதுகாப்பு ஆய்வாளர், தகவல் பாதுகாப்பு நிர்வாகி, தகவல் மென்பொருள் மேம்படுத்துபவர், (சாப்டுவேர் டெவலப்பர்) டேட்டா செக்யூரிட்டி மேலாளர், வாட்ஸ்-அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற வலைத்தலங்களிலும் அதிக வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

தொழில்நுட்பம் சார்ந்த புதிய படிப்புகள்

சென்ற ஆண்டு தொடங்கிய முதுநிலை பட்டயப்படிப்பு (எம்.எஸ்.சி தகவல் தொழில்நுட்பம்) இரண்டு ஆண்டு முழு நேரபடிப்பில் புதிய தொழில்நுட்பம் சார்ந்த பாடங்கள் டேட் சயின்ஸ், பிக் டேட்டா அனலிடிக்ஸ், மொபைல் அப்ளிகேஷன்ஸ் மற்றும் ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன. இந்த படிப்பின் மூலம் கணினி துறை, தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் மொபைல் கம்யூனிகேஷன் போன்ற பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Rain news Balachandran press meet
 வேலை வாய்ப்புகள்

வேலை வாய்ப்புகள்

சாப்ட்வேர் புரோகிராமிங், சாப்ட்வேர் என்ஜினீயர், வெப்சைட் டிசைனர், டேட்டா அனலிஸ்ட், மொபைல் ஆப் டெவலப்பர், டெஸ்ட் என்ஜினீயர் போன்ற வேலைவாய்ப்புகள் பல்வேறு கணினி நிறுவனங்களில் உள்ளது. முன்னணி கணினி நிறுவனங்களான இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் போன்ற கணினி நிறுவனங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

புள்ளியியல் துறை படிப்புகள்

இந்த ஆண்டு புள்ளியியல் துறையின் சார்பில் (எம்.எஸ்.சி டேட்டா அனலிடிக்ஸ்) இரண்டு ஆண்டு முழு நேர முதுநிலை பட்டய படிப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த படிப்பின் வாயிலாக புள்ளியியல் பங்கு சந்தை, அறிவியல் ஆய்வு மற்றும் கணினி போன்ற பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வாளர், தொழில்நுணுக்க ஆய்வாளர், அளவு மதிப்பீட்டு ஆய்வாளர், ஷேர் மார்க்கெட் டேட்டா அனலிஸ்ட் மற்றும் கூகுள் போன்ற ஏராளமான துறைகளில் வேலைகள் நிச்சயம் உள்ளது.

ஆன்லைன் விண்ணப்பம்

மேற்கூறிய பாடத்திட்டங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இன்னும் சில இடங்களே உள்ளன. இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பத்தை www.msuniv.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து துறை அலுவலகத்தை அணுகவும். மேலும் விபரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப மையம் மற்றும் பொறியியல் துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்க்ள்.

English summary
Above article mentioned that Introduction of new postgraduate courses at Manonimini Sundaranar University.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia