லினக்ஸ் படிப்பு ஆன்-லைனில் அறிமுகம்!!

Posted By:

புதுடெல்லி: லினக்ஸ் தொடர்பான படிப்பை ஆன்-லைனில் லினக்ஸ் பவுண்டேஷன் அறிமுகம் செய்துள்ளது. உலகில் உள்ள பல்வேறு சூப்பர் கம்ப்யூட்டர்கள், சர்வர்கள், வர்த்தக தொடர்பான கருவிகள், ஆன்ட்ராய்ட் கருவிகளில் லினக்ஸ் சாஃப்ட்வேர் பயன்பாடு உள்ளது. இதற்காக லினக்ஸ் படித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் லினக்ஸ் தொடர்பான படிப்புகளை ஆன்-லைனில் லினக்ஸ் பவுண்டேஷன் அளிக்கவுள்ளது.

லினக்ஸ் படிப்பை படிப்பவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பும், அதிக சம்பளமும் கிடைக்கும் என்பதால் இந்தப் படிப்புக்கான மவுசு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லினக்ஸ் படிப்பு ஆன்-லைனில் அறிமுகம்!!

லினக்ஸ் படிப்பு படிப்பதால் லினக்ஸ் சிஸ்டம், லினக்ஸ் சாஃப்ட்வேர் அறிமுகம் எளிதாகும். 8 வாரம் கொண்ட படிப்பாகும் இது. லினக்ஸ் கமாண்டுகள் உள்ளிட்ட விஷயங்கள் இதில் கற்றுத் தரப்படும். லினக்ஸ் விநியோக சிஸ்டத்தில் எப்படி நுழைந்து வழிகாட்டுவது என்பது குறித்து படிப்பில் தெளிவாக எடுத்துரைக்கப்படும்.

லினக்ஸ் ஆன்-லைன் படிப்பில் சேர இங்கு கிளிக் செய்யுங்கள். https://www.edx.org/course/introduction-linux-linuxfoundationx-lfs101x-0#!

English summary
Introduction to Linux is a free, self-paced online course conducted by the Linux Foundation. Develop a good working knowledge of Linux using both the graphical interface and command line, covering the major Linux distribution families. Linux powers 94% of the world's supercomputers, most of the servers powering the Internet, the majority of financial trades worldwide and a billion Android devices. In short, Linux is everywhere. It appears in many different architectures, from mainframes to server to desktop to mobile and on a staggeringly wide variety of hardware.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia