உதவி வேளாண் அலுவலர் பணி: இன்டர்வியூ தேதியை அறிவித்தது டி.என்.பி.எஸ்.சி.

Posted By:

சென்னை: உதவி வேளாண் அலுவலர் பணிக்கான இன்டர்வியூ தேதிகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

இந்தப் பணியிடங்களை நிரப்ப இன்டர்வியூ நவம்பர் 2 முதல் 7 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவி வேளாண் அலுவலர் பணி: இன்டர்வியூ தேதியை அறிவித்தது டி.என்.பி.எஸ்.சி.

தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணியில் அடங்கிய உதவி வேளாண்மை அலுவலர் பணிக்கான காலியிடங்களை நிரப்ப கடந்த ஏப்ரலில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில், 3,236 பேர் பங்கேற்றனர்.

இதில், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் நேர்காணல் தேர்வுக்கு 795 பேர் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் விவரங்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நேர்காணல் தேர்வு நவம்பர் 2-ஆம் தேதி தொடங்கி, 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தேர்வு தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

வேளாண்மைத் தேர்வு எழுதியவர்கள் தங்களது இன்டர்வியூ தேதிகளை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம்.

English summary
Tamilnadu Public Services commission (TNPSC) has announced the Interview dates for the post of assistant Agri. officer. For More details aspirants can logon into www.tnpsc.gov.in

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia