அஞ்சல் அலுவலகத்தில் ஆயுள் காப்பீடு முகவர்களுக்கான தேர்வு நேர்காணல் நடைபெறவிருக்கிறது

Posted By:

அஞ்சல் அலுவலகத்தில் ஆயுள் காப்பீடு முகவர்களுக்கான தேர்வு . தகுதியுடையோர் பங்கேற்கலாம் .
அஞ்சல் ஆயுள் காப்பீடு, ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் ஆகியபணிகளுக்கான நேரடித் தேர்வு தாம்பிரத்தில் ஜூன் 23 ல் நடைபெறவிருக்கின்றன. இப்பதவிகளுக்கு 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது . ஜூன் 23 ல் காலை 11 மணி அளவில் நடைபெறவிருக்கிற நேரடிதேர்வில் 5 ஆயிரத்திற்கு குறைவான பேர் வசிக்கின்ற பகுதியில் பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது . வயது 18 முதல் 65 வரை இருக்க வேண்டும் .

ஆயுள் காப்பீடு முகவர்களுக்கான தேர்வு  நேர்காணலில் தகுதியுடையோர் பங்கேற்கலாம்

வேலையில்லா பட்டதாரிகள் , ஆயுள் காப்பீட்டு முகவர்கள் ,மகிளா மண்டல் பணியாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்  உள்ளிட்டோர் நேர் காணலில் பங்கேற்கலாம் . தாம்பரத்தில் அஞ்சல் துறை வட்டாரத்தில் மூத்த கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் . நேர்காணலின் போது கல்வித்தகுதி இதர விவரங்களுடன் இரண்டு புகைப்படங்கள் சமர்பிக்க வேண்டும் .

English summary
here article mentioned about postal agents interview

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia