பொறியியல் பணித் தேர்வு: அக்டோபர் 27 முதல் நேர்முகத் தேர்வு

Posted By:

சென்னை: ஒருங்கிணைந்த பொறியியல் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அக்டோபர் 27ஆம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.)அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒருங்கிணைந்த பொறியியல் பணித் தேர்வில் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான 100 காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை 27-இல் தேர்வு நடத்தப்பட்டது. இந்த எழுத்துத் தேர்வில் 31,653 பேர் கலந்து கொண்டனர்.

பொறியியல் பணித் தேர்வு: அக்டோபர் 27 முதல் நேர்முகத் தேர்வு

இதில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் நேர்காணலுக்கு 219 பேர் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. நேர்காணல் அக்டோபர் 27 முதல் 29 வரை நடைபெறுகிறது.

தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட 219 பேர் இந்த நேர்முகத் தேர்வில் லந்துகொள்ளவேண்டும்.

இதுதொடர்பாக அவர்களுக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தகவல் கிடைக்கப் பெறாதவர்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொண்டு நேர்முகத் தேர்வுக்கு வரலாம்.

இவ்வாறு டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu Public Services Commission has announced the interview date for the Combined Engineer posts. Members in the Temporary list will attend the interview from October 27th.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia