அனைத்து கல்வி உதவித்தொகைகளுக்கும் விண்ணப்பிக்க ஒரே இணையதளம் அறிமுகம்

Posted By:

சென்னை: மாணவர்கள் கல்வி உதவித்தொகைகளை எளிதாக பெறுவதற்காக ஒரே இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் மத்திய அரசு வழங்கும் அனைத்து கல்வி உதவித்தொகைகளுக்கும் இந்த இணையதளம் ஒன்றிலேயே விண்ணப்பிக்க முடியும்.

இந்த புதிய இணையதளம் தொடர்பாக அனைத்து கல்வி நிலையங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

அனைத்து கல்வி உதவித்தொகைகளுக்கும் விண்ணப்பிக்க ஒரே இணையதளம் அறிமுகம்

புதிய இணையதம் அறிமுகப்படுத்தப்பட்டது குறித்தும், மத்திய அரசின் பல்வேறு கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் குறித்தும் மாணவர்களிடையே விளம்பரப்படுத்துமாறு பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் உயர்கல்வித் துறை, சமூகநீதி மேம்பாட்டுத் துறை, பழங்குடியினர் நலத் துறை, மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத் துறை, சிறுபான்மையினர்நலத் துறை, பள்ளிக் கல்வி- எழுத்தறிவுத் துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் பல்வேறு கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தக் கல்வி உதவித் தொகைகள் குறித்த நேரத்தில் விரைவாகவும், நேரடியாகவும் மாணவர்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காக, தேசிய இ-கல்வி உதவித்தொகை இணையதளத்தை (http//sholerships.gov.in) மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உருவாக்கியிருக்கிறது.

இந்தக் கல்வி உதவித்தொகைகளைப் பெற விரும்பும் மாணவர்கள் முதலில், இந்த இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவர்களால் இணையத்தில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பம், சம்பந்தப்பட்ட அவர்களுடைய கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் சார்பில் முதலில் பரிசீலிக்கப்பட்டு பின்னர் இணையத்தில் இறுதியாக சமர்ப்பிக்கப்படும்.

மேலும் நாம் அனுப்பிய விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது, ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்பதையும் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என வசதியும் உள்ளது.

English summary
The Union government has introduced a new internet site for all educational scholarships. students can apply in the single site for all his scholarhip. For more details students can contact the site http//sholerships.gov.in

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia