ஹைய்யா ஜாலி...அடுத்த ஆண்டு முதல் சர்வதேச மாணவர்களும் ஜேஇஇ எழுதலாம்..!!

Posted By:

டெல்லி: அடுத்த கல்வியாண்டு முதல் சர்வதேச மாணவர்களும் ஐஐடி-ஜேஇஇ தேர்வுகளை எழுதி இந்தியாவில் உயர்கல்விப் படிப்புகளில் சேர முடியும்.

தற்போது ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர உதவும் ஐஐடி-ஜேஇஇ நுழைவுத் தேர்வை சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்தி வருகிறது. இதில் முன்னிலை பெறும் மாணவர்களுக்கு ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது.

ஹைய்யா ஜாலி...அடுத்த ஆண்டு முதல் சர்வதேச மாணவர்களும் ஜேஇஇ எழுதலாம்..!!

இந்தத் தேர்வுகளை சர்வதேச மாணவர்கள் எழுதிய முடியாத நிலை இருந்தது. இந்த விதி தற்போது தளர்த்தப்பட்டு உள்ளது. இனி சர்வதேச மாணவர்களும் இந்த தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்றால் நாட்டிலுள்ள ஐஐடி-களில் சேர முடியும்.

இதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளன. அடுத்த கல்வியாண்டு முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வருகிறது. அடுத்த கல்வியாண்டு முதல் 10 நாடுகளில் ஐஐடி-ஜேஇஇ தேர்வு சிபிஎஸ்இ நடத்தவுள்ளது. ஒவ்வொரு ஆண்டு சிபிஎஸ்இ கல்வி வாரியம் சார்பில் ஏதாவது ஒரு ஐஐடி நிர்வாகம் இந்த நுழைவுத் தேர்வை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத் ஆண்டு முதல் சார்க் நாடுகளான ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் இந்தத் தேர்வு நடத்தப்படவுள்ளது.

English summary
IIT-JEE (Joint Entrance Examination), which is conducted to offer admission to engineering courses for Indian and Indian expat students is going ahead to widen its horizon by opening its doors for international students from the upcoming year. To marks its presence across the globe, now Indian Institute of Technologies are planning to conduct JEE-entrance exam simultaneously in 10 countries. Recently, the IIT council granted approval to hold the Joint Entrance Examination (JEE) entrance exam in 10 countries, which enables Indian and international students to appear for exam on the same day.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia