சென்னை, தரமணியில் செயல்பட்டு வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வு பட்டய படிப்புகள் வரும் ஜனவரி முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வு பட்டய வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல், தமிழக வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு குறித்த வகுப்புகள் மட்டுமின்றி கல்வெட்டுப் படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்தலுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளது.
கல்வித் தகுதி : 10-வம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை : இதில் சேர விருப்பமுடையவர்கள் www.ulakaththamizh.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பயிற்சி வழங்கப்படும் நாட்கள் : இந்தப் பட்டயப் படிப்பு சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாள்களில் ஓராண்டுகாலம் நடத்தப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.2,500
வயது வரம்பு : வயது வரம்பு கிடையாது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் வந்து சேரும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் நாள் : இதற்கான வகுப்புகள் 2020 ஜனவரி மாதம் தொடங்கப்படும்.
இதுகுறித்த மேலும் தகவலை அறிய 044-22542992, 95000 12272 என்னும் தொலைபேசி எண்களுக்கு தொடா்புகொள்ளலாம்.