சென்னையில் சர்வதேச பொறியியல் வள கண்காட்சி... வரலாம் வரலாம் வாங்க!

Posted By:

சென்னை : ஆறாவது சர்வதேச பொறியியல் கண்காட்சியினை பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இஇபிசி) நடத்துகிறது.

ஆறாவது சர்வதேச பொறியில் (ஐஇஎஸ்எஸ்) கண்காட்சியில் உலக அளவில் உள்ள தொழில்நுட்ப புதுமைகள், ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிபாகங்கள், இன்டஸ்ட்ரியல் மற்றும் மின் எந்திரங்கள், சோதனை, அளவீடு மற்றும் பகுப்பாய்வு உபகரணங்கள், மின் கூறுகள் மற்றும் பாகங்கள், மூல பொருட்கள், சேர்மானங்கள் மோல்டிங்ஸ் மற்றும் பொருட்கள், தொழில்துறை விநியோக மற்றும் ஒப்பந்ததொழில் குறித்தவைகள் பற்றிய உரையாடல் மற்றும் கண்காட்சி நடைபெறும்.

சென்னையில் சர்வதேச பொறியியல் வள கண்காட்சி... வரலாம் வரலாம் வாங்க!

ரஷியன் கூட்டமைப்பு தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் டெனிஸ் மென்ட்ரவ் மற்றும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இருவரும் இணைந்து ஆறாவது சர்வதேச பொறியியல் கண்காட்சியினை ஆரம்பித்து வைக்கின்றனர்.

ஆறாவது சர்வதேச பொறியியல் கண்காட்சி நடைபெறும் இடம் - சென்னை டிரேடு சென்டர்

நாள் - மார்ச் 16ம் தேதி முதல் மார்ச் 18ம் தேதி வரை நடைபெறும்

இடம் - சென்னை

நாடு . இந்தியா

ஆறாவது சர்வதேச பொறியியல் கண்காட்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். எந்த விதக் கட்டணமும் கண்காட்சிக்கு கிடையாது.

இந்தக் கண்காட்சியில் சர்வதேச அளவில் தொழிற்நுட்ப துறையில் உள்ள புதுமைகள் யுக்திகள் பற்றி அறிந்து கொள்ளலாம். இந்தியா உலகஅளவில் வர்த்தகத் துறையில் நான்காவது பெரிய நாடாக விளங்குகிறது.

ஆறாவது சர்வதேச பொறியியல் கண்காட்சியினை பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இஇபிசி) நடத்துகிறது. சர்வதேச பொறியியல் கண்காட்சி (ஐஇஎஸ்எஸ்) அமைக்கப்படுவதின் நோக்கம் (இஇபிசி) இந்தியா, பொறியியல் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி இறக்குமதியில் தன்னுடைய பலத்தினை அதிகப்படுத்துவதாகும்.

முன்னணி இறக்குமதியாளர்கள், வாங்குவோர், விநியோகஸ்தர்கள் மற்றும் பொறியியல் தயாரிப்பு மொத்தவிற்பனையாளர்கள்ஆகியோர் கண்காட்சிக்கு வருகை புரிகின்றனர். வணிக தொடர்பு கட்ட சேவைகளில் ஏற்றுமதியாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும்.

உயர்தர பொறியியல் பொருட்களை போட்டி விகிதத்தில் தயாரிப்பதில் இந்தியா சிறந்து விளங்குகிறது. பொறியியல் தொழில்துறையில் ஒரு 'அவுட்சோர்ஸிங் மையமாக' இந்தியா உயர்ந்து ஒளிர்ந்துக் காணப்படுகிறது.

சர்வதேச அளவிலான தொழிற்நுட்ப காண்காட்சி சென்னை டிரேடு சென்டரில் நடைபெறுகிறது. 300-க்கும் அதிகமான காட்சியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். பங்குதாரர் நாடாக ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உள்ளன,

இந்தியா ரஷ்யா வணிக மன்றம், தொழில்நுட்பம் பெவிலியன், 15 பகுதிகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் கலந்து கொள்கிறார்கள்

எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மையம், எஸ்ஐடிபிஐ பெவிலியன், ஐஎஸ்பி - இஇபிசி இந்திய நிர்வாகி அறிவு தொடர் பகுதிகள் ஆகியவை இடம் பெறும்,

400 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். முக்கிய பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் விற்பனையாளர் வளர்ச்சியினை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.

English summary
6th International Eengineering Sourcing Sshow 2017 will be held in Chennai. The Show Will Exhibits Industrial Supply, Metal & Shop Floor, Industrial & Electrical Machinery, Automotive Component, Innovation and Technology Manufacturing, Investments & Engineering Project Exports And Much More.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia