ஆதரவில்லாத மாணவர்கள் ஐஐடி, என்ஐடி-யில் பயில வட்டியில்லாத கடன்

Posted By:

சென்னை: ஆதரவில்லாத மாணவர்கள் ஐஐடி, என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கு வட்டியில்லாக் கடனை வழங்குவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

நாட்டிலுள்ள முக்கியமான கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

தற்போது என்ஐடி-யில் கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.70 ஆயிரத்திலிருந்து ரூ.1.25 லட்சமாக உயர்த்தப்பட்ட உள்ளதாகத் தெரிகிறது.

ஆதரவில்லாத மாணவர்கள் ஐஐடி, என்ஐடி-யில் பயில வட்டியில்லாத கடன்

இதேபோல ஐஐடி-யிலும் கட்டணம் உயரவுள்ளது. அங்கு ரூ.90 ஆயிரத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயரவுள்ளதாகத் தெரிகிறது.

இந்த உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதரவற்ற மாணவர்களுக்குத்தான் வட்டியில்லாக் கடனை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.

இதுகுறித்து உயர் கல்விநிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: உயர் கல்வி நிறுவனங்களில் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளதால் மாணவர்கள் அவதிப்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு வட்டியில்லாக் கடனை வழங்குவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்காக அந்தக் கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கு உதவ ஹெல்ப் டெஸ்க்குகள் ஏற்படுத்தப்படும் என்றார் அவர்.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia