அதிக அறிவுத் திறனில் ஐன்ஸ்டீனை மிஞ்சிய 11 வயது இந்திய வம்சாவளிச் சிறுமி!

Posted By:

சென்னை: அறிவுத் திறன் சோதனையில், அதிகபட்ச குறியீட்டு எண்ணைப் பெற்று, பிரிட்டனில் வாழும் 11 வயது இந்திய வம்சாவளிச் சிறுமி பெற்று சாதனை புரிந்துள்ளார். இது விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் அறிவுத்திறனை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மென்ஸா சாதனை

மொழித் திறன், பொது அறிவு, நினைவுத் திறன், கணிதத் திறன், சிக்கலுக்குத் தீர்வு காணும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அறிவுத் திறனை சோதிக்கும் 150 கேள்விகள் கொண்ட "காட்டெல்-3பி' எனும் தேர்வை மென்ஸா அமைப்பு நடத்தி வருகிறது. இதன் மூலம் ஒருவரது அறிவுத்திறன் சோதிக்கப்படுகிறது.

162 மதிப்பெண்கள்

மென்ஸ் அமைப்பு நடத்திய இந்தத் தேர்வில் காஷ்மியா வாஹி எனும் 11 வயதுச் சிறுமி, 162 மதிப்பெண்களைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்தவர்

இவர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்தவர். இவரது தந்தை வங்கி அதிகாரியாக லண்டனுக்கு மாற்றலானபோது, பிரிட்டனுக்கு வந்தார் காஷ்மியார். தற்போது காஷ்மியா, லண்டனிலேயே கல்வி பயின்று வருகிறார்.

விளையாட்டிலும் கெட்டி

படிப்பில் மட்டும் சுட்டி அல்லாமல், வலைப்பந்து, டென்னிஸ், சதுரங்கம் ஆகிய விளையாட்டுகளிலும் படுசுட்டியாக இருக்கிறார் காஷ்மியா.

பதக்கக் குவியல்

தனிப்பட்ட முறையிலும் பள்ளி சார்பிலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான கோப்பைகளையும் பதக்கங்களையும் வசமாக்கியுள்ளார் காஷ்மியா. இவர் வீட்டில் பதக்கக் குவியலே உள்ளதாம்

சிறப்பு பயிற்சி இல்லை

அறிவுத் திறன் தேர்வை எழுதுவதற்காக, சிறப்பான பயிற்சி எதையும் அவர் மேற்கொள்ளவில்லை என்பது சிறப்பம்சம். படிப்பு, விளையாட்டுக்கு இடையே பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் விதமாகப் படித்ததோடு சரி என்கிறார் காஷ்மியா.

அபார அறிவுறுத்திறன்

மென்ஸா அறிவுத் திறன் சோதனையில் 162-தான் அதிகபட்ச மதிப்பெண் அல்லது குறியீட்டு எண் ஆகும்.

ஐன்ஸ்டீனை விட அதிகம்

உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைனைவிட அதிக அறிவுத் திறன் குறியீட்டு எண்ணை காஷ்மியா பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இது உலக விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தேர்வு

ஆனால் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், எந்த அறிவுத் திறன் தேர்வும் எழுதியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மென்ஸா சோதனை அடிப்படையில், அவரது அறிவுத் திறன் குறியீட்டெண் 160 என்று பொதுவாகக் கருதப்படுகிறது.

அதையும் தாண்டி...

அதையும் தாண்டி காஷ்மியா இந்த 162 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

English summary
A 11-year-old Indian-origin girl in the UK has achieved the top possible score of 162 on a IQ test of Mensa, becoming one of the youngest brainiest students in the country. Mumbai-born Kashmea Wahi achieved the top score of 162 out of 162, putting her in the league of scientists Albert Einstein and Steven Hawking and in the top 1 per cent of the country's brightest.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia