இராணுவ தளவாட தொழிற்சாலையில் சேரனுமா நீங்க?

Posted By:

சென்னை : இராணுவ தளவாட தொழிற்சாலையில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு 370 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இராணுவத்திற்குத் தேவையான தளவாட பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை பல இடங்களில் செயல்பட்டு வருகின்றன. தெலுங்கான மாநிலத்தில் உள்ள மேடக் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் இராணுவ தளவாட தொழிற் சாலையில் செமிஸ் கில்டு பணிக்கு 370 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிட்டர் பணிக்கு காலியிடம் - 80
மெஷினிஸ்ட் பணிக்கு காலியிடம் - 63
எலக்ட்ரீசியன் பணிக்கு காலியிடம் - 27
பிட்டர் எலக்ட்ரானிக்ஸ் பணிக்கு காலியிடம் - 20
டர்னர் பணிக்கு காலியிடம் - 25
வெல்டர் பணிக்கு காலியிடம் - 65
இதைத் தவிர எலக்ட்ரோ பிளேட்டர், எலக்ட்ரிக் பிட்டர், எக்சாமினர், மோல்டர், பெயிண்டர், எக்ஸாமினர் வெல்டர் போன்ற பணிகளுக்கும் தேவையான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இராணுவ தளவாட தொழிற்சாலையில் சேரனுமா நீங்க?

வயது வரம்பு -
18 முதல் 32 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்புச் சலுகை அரசு விதிகளின் படி அனுமதிக்கப்படும்.

கல்வித் தகுதி -
பத்தாம் வகுப்பு (மெட்ரிகுலேஷன்) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் என்.ஏ.சி. என்.டி.சி சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை -
எழுத்துத் தேர்வு மற்றும் தொழில் செய்முறைத் தேர்வு மூலம் விண்ணபதாரார்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் -
விண்ணப்பதாரர்கள் Rs. 50/- விண்ணப்பக்கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

எஸ்சி, எஸ்டி பிரிவினர், முன்னாள் படைவீரர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் ஆகியோருக்குக் கட்டணம் ஏதும் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை-
ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். 10.03.2017ம் தேதிக்குள் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்.

மேலும் தகவல் பெற www.ofmedak.gov.in என்ற இணைதளத்தைப் பார்க்கவும்.

English summary
Indian ordance factory has announced that fitter, electrician and multiple posts are available in Indian ordance factory telugana.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia