சென்னை: இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன்(ஐஓசி) நிறுவனத்தில் அப்ரண்டீஸ் உள்பட பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 7-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

கெமிக்கல், மெக்கானிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 95 அப்ரண்டீஸ் பணியிடங்கள் காலியாகவுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு வயது 18 முதல் 24-க்குள் இருக்கவேண்டும். அனுபவமிக்கவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
தகுதியுள்ளவர்ள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் அனுப்புதல் நலம்.
நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்கள், விவரம் இணையதளத்தில் வெளியிடப்படும். அவர்கள் அதை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு வரலாம். மார்ச் 7-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு https://www.iocl.com என்ற இணையதளத்தை அணுகலாம்.


Click it and Unblock the Notifications

