இந்திய கடல்சார் பல்கலை.யில். காத்திருக்கும் உதவிப் பதிவாளர் பணியிடங்கள்

Posted By:

சென்னை: இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் 13 உதவிப் பணியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு டிசம்பர் 18-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.

இந்திய கடல்சார் பல்கலை.யில். காத்திருக்கும் உதவிப் பதிவாளர் பணியிடங்கள்

7 உதவிப் பதிவாளர், 6 உதவிப் பதிவாளர்(நிதி) என மொத்தம் 13 இடங்கள் காலியாகவுள்ளன.

விருப்பமுள்ளவர்கள் இந்தப் பயணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமும் அஞ்சல் மூலமும் அனுப்பலாம். தகுந்த சான்றிதழ்களை இணைத்திருப்பது அவசியம். டிசம்பர் 18 விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதியாகும்.

இந்திய கடல்சார் பல்கலைக்கழகமானது மத்திய பல்கலையாக செயல்பட்டு வருகிறது. இந்திய கடல்சார் பல்கலைக்கழகச் சட்டம் 2008-ன் படி இது மத்திய அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதற்கு சென்னை, கொல்கத்தா, மும்பை, விசாகப்பட்டினம், கொச்சி, கண்ட்லா ஆகிய இடங்களில் பல்கலைக்கழக வளாகங்கள் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு www.imu.edu.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia