இந்திய சுதந்திரதினம் ஒரு பார்வை

Posted By:

சும்மா கிடைக்க சுதந்திரம் என்ன சுக்கா மிளகா கிளியே

அடிமை வந்தான் வெளியே ஆளும் பிரிட்டிஸ் அரசுக்கு எதிரே !!

இந்தியசுதந்திர தினமும் நாட்டு மக்களும் பிரிட்டிஸ் அரசை எதிர்த்துநின்று சுதந்திரம் பெறல்

இரநூறு ஆண்டுகள் பிரிட்டிஸ் அரசை எதிர்த்து நின்று சுதந்திரம் பெற்றோம் .
1857 ஆம் ஆண்டு சுதந்திர போராட்ட்த்தின் தீவிரம் வெளிப்பட்டது . சிப்பாய் கழகம் கொண்டு சுதந்திர கனவை தீவிரமாக வெளிப்பட செய்து இந்தியாவின் புரட்சிக்கு வழிவகுத்த பெருமை பிரிட்டிஸ் அரசையே சாரும் .

1857 களில் இந்தியாவில் இருந்த ஒற்றுமைகளை சீர்குலைத்து மக்களை சீற்றமைடைய செய்தது ஆங்கில அடக்குமுறையை இந்தியாவின் கம்மெனி ஆட்சிக்கு முடிவு கட்டியதுடன் இங்கிலாந்து நேரடி ஆட்சிக்கு கீழ் இந்தியா சென்றது .
இந்திய மக்களின் நில உரிமை பரிக்கப்படல் மற்றும் ஆங்கிலேயரின் பாரபட்சம், சமயக்காரணகள் என்று பல்வேறு வேற்றுமைகளை காட்டினார்கள் இந்தியர்களிடையே உறங்கி கொண்டிருந்த தீயை எறிந்த முதல் கனல் சிப்பாய் கழகம் ஆகும் .

சிப்பாய் கழகம் டில்லி , கான்பூர், ஜான்சி, லக்னோ என பயணித்து தோல்வியுற்றாலும் பிரிட்டிசாரின் மனதில் முதல் களக்கம் ஏற்ப்படுத்தியது . கவர்னர் ஜெனரலுக்கு பதிலாக பிரிட்டிஸ் அரசு இந்திய அரசுக்கான இங்கிலாந்து அரசின் பிரதிநிதிகளை நியமிக்க துவங்கினார்கள் . பிரிட்டிஸ் மகாராணியின் பேரறிக்கை வாசிக்கப்பட்டது . இந்தியர்களுக்கான உரிமைகள் அவர்களுக்கான நீதி அனைத்தும் வழங்குவதாக உறுதியளித்தது .
இந்தியாவிற்க்கான முதல் வைசிராயாக கானிங் பிரபு நியமிக்கப்பட்டார் .

தொடர்ந்து சிறுசிறு சீர்திருத்தங்கள் செய்தனர் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களின் எழுச்சிக்கும் தொடக்கதாரியாக இருந்த சிப்பாய்கழகத்தில் ஜான்சி நானாபட்னாவிஸ், பகதூர் ஷா என அரசர்கள் முக்கிய பங்கு வகித்தனர். இவ்வாறு சுதந்திர தொடக்கம் அமைந்தது .
இந்திய தேசிய காங்கிரஸ் இது நாட்டின் விடுதலைக்கு முக்கிய பங்காற்றிய இயக்கம் ஆகும் . காங்கிரஸூடன் பல்வேறு இயக்கங்கள் முக்கிய பங்காற்றின.
நாட்டின் எழுச்சிக்கு முக்கிய பங்காற்றிய சுபாஷ் சந்திரபோஸ், வல்லபாய் பட்டேல், பகத்சிங், கப்பலோட்டிய தமிழன் வ.வூ.சிதம்பரணார் , காமராஜ் , இராஜாஜி, காந்திஜி போன்றோரை கொண்டிருந்தது இயக்கம் இந்திய தேசிய இயக்கம் ஆகும் .

போராட்டங்களின் போக்கு :

இந்திய தேசிய இயக்கமான காங்கிரஸ் நாட்டு மக்களின் சுதந்திரத்திற்காக போராடினார்கள் ஒத்துழையாமை இயக்கம் மற்றும் கிலாபத் இயக்கம் மற்றும் சட்டமறுப்பு இயக்கம் , இந்திய தேசிய காங்கிரஸ் அத்துடன் இந்திய தேசிய இராணுவம் போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தி ஆயிரக்கண்கானோர் உயிர்தியாகம் செய்து பெற்ற சுதந்திரம் இந்திய சுதந்திரம் ஆகும் .
இந்திய மாணவர்கள் அந்த சுதந்திரத்தை பேணி காக்க வேண்டும் . இன்றைய நன்நாளில் சுதந்திரதினத்தின்    அறுவடை முடிக்கப்பட்ட நாளாகும் அவற்றை காக்க வேண்டும். இந்திய தேசிய தலைவர்க்கும் கொடிக்கும் மரியாதை செலுத்த வேண்டும் . அடுத்து எந்தவொரு தேசத்தையும் இந்தியாவை நோக்கி வர அனுமதிக்க கூடாது . நாட்டின் ஒற்றுமை ஒருமைபாட்டை  போற்றி காக்க வேண்டும் . 

சார்ந்த பதிவுகள் :

சுதந்திரம் இந்தியாவின் இனியதொரு ஆரம்பம் 

செய் அல்லது செத்துமடி, ஜெய்ஹிந்த் இரண்டும் 75 வருடங்களை கடந்து நிற்கிறது

English summary
above article telling about Indain Independence Day special

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia