பணியாற்ற அழைக்கிறது இந்திய கடலோரக் காவல்படை!!

Posted By:

சென்னை: இந்தியக் கடலோரக் காவல்படை தனது யாந்த்ரிக் பகுதியில் பணியாற்ற தகுதியான நபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

விருப்பமும், தகுதியும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 8-ம் தேதிக்குள் ஆன்-லைனில் விண்ணப்பம் செய்யலாம்.

பணியாற்ற அழைக்கிறது இந்திய கடலோரக் காவல்படை!!

யாந்த்ரிக் பகுதியில் 02/2016 பேட்ச்சுக்காக ஆட்களை கடலோரக் காவல்படை தேர்வு செய்யவுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு 3 ஆண்டு டிப்ளமோ(எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன் என்ஜினீயரிங்) அல்லது அதற்கு இணையான படிப்பைப் படித்து முடித்திருக்கவேண்டும்.

வயது 18 முதல் 22-க்குள் இருக்கலாம்.

தகுதியும், விருப்பமுள்ளவர்கள் http://joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணியிடங்களுக்கான தேர்வு ஏப்ரலில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியக் கடலோரப் பகுதியைப் பாதுகாக்கவும், கண்காணிக்கவும், கடலோரக் காவல் படை 1978-ல் உருவாக்கப்பட்டது. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கடலோரக் காவல் படை செயல்படுகிறது.

English summary
Indian Coast Guard invited applications from three years diploma holders to join as Yantrik 02/2016 Batch. The eligible candidates can apply online to the post through the organisation's website latest by 08 February 2016. Notification details Advertisement No.: DAVP/10119/11/0053/1516 Indian Coast Guard Vacancy Details Name of the Post: Yantrik 02/2016 Batch Eligibility Criteria for Yantrik 02/2016 Batch Educational Qualification Three years Diploma in Electrical/Mechanical /Electronics and Telecommunication Engineering or equivalent branch recognised/Approved by All India Council of Technical Education (AICTE) with 60% in aggregate.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia