+2 முடிச்சாச்சா.. 'க்விக்கா' வாங்க.. கடலோரக் காவல் படையில் காத்திருக்கு 'நேவிக்' பணி!

Posted By:

சென்னை : இந்தியன் கோஸ்ட் கார்டு எனப்படும் இந்திய கடலோர காவல்படை ஆயுதப் படை பிரிவின் அங்கமாகத் திகழ்கிறது. இது கடற்கரை மற்றும் கடலோரப் பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகிறது.

கடலோர காவல் படையில் நேவிக் (ஜெனரல் டியூட்டி) பணிக்காக பயிற்சியில் சேருவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற ஆண்கள் இந்த பயிற்சியுடன் கூடிய பணியில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 22.03.2017ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

+2  முடிச்சாச்சா.. 'க்விக்கா' வாங்க.. கடலோரக் காவல் படையில் காத்திருக்கு 'நேவிக்' பணி!

கல்வித்தகுதி -

12ம் வகுப்புப் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முறையில் படித்து 50% மார்க்குகளுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களில் மட்டுமாவது 50 % மார்க்குகளுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும்.

வயது வரம்பு -

18 வயது முதல் 22 வயது வரை உள்ளவர்கள் கடலோர காவல் படையிலுள்ள நேவிக் பணியில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்புச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

உடல் தகுதி -

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ உயரம் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ விரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். உயரத்திற்கு ஏற்ற எடை உள்ளவராக இருத்தல் அவசியம். பார்வைத்திறன் 6/6 என்ற அளவுக்குள் இருக்க வேண்டும். பாதிப்படைந்த நிலையில் 6/9 என்ற அளவுக்குள் இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை -

தகுதியான நபர்கள் தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவத் தேர்வு ஆகியவற்றிற்கு உட்படுத்தப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பயிற்சிக்குப் பின் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை -

ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இ-மெயில் மற்றும் செல்போன் நம்பரைக் கட்டாயம் விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிட வேண்டும். விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்த பிறகு 3 கணிணிப் பிரதிகள் எடுத்து அதில் புகைப்படம் ஒட்டி தேவையான சான்றிதழ் நகல்கள் அனைத்தையும் இணைத்து அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று தயார் நிலையில் வைத்திருக்கவும். தேர்விற்கு அழைக்கும் போது விண்ணப்பதாரர்கள் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.

இணைதளத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 22.03.2017ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

மேலும் தகவல் பெற www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளமுகவரியை அனுகவும்.

English summary
Indian Coast Guard Recruitment 2017, job training with work opportunities are available in Indian Coast Guard.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia