நீங்கள் விளையாட்டு வீரரா...? விமானப்படையில் ஏர்மேன் பணியிடம் காலியா இருக்கு!!

Posted By:

சென்னை: விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது.

ஒய் பிரிவில் இந்தப் பணியிடங்கள் காலியாகவுள்ளன. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். மணமாகாத இளைஞர்கள் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது முக்கியமான விதியாகும்.

நீங்கள் விளையாட்டு வீரரா...? விமானப்படையில் ஏர்மேன் பணியிடம் காலியா இருக்கு!!

தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிராஸ் கன்ட்ரி, கிரிக்கெட், சைக்கிளிங், கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், ஹாக்கி, ஹேண்ட்பால், கபடி, டென்னிஸ், துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், வாலிபால், வாட்டர்போலோ, மல்யுத்தம், பளுதூக்குதல், கோல்ஃப் போன்ற விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் பிப்ரவரி 20-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

உலகின் 4-வது பெரிய விமானப்படையைக் கொண்டது நமது இந்திய விமானப்படை. இந்திய வான்பகுதியைக் காக்கும் பணியையும், சிக்கலான நேரங்களின்போது எல்லைப் பகுதியில் போரிடும் பணியையும் செய்து வருகிறது இந்திய விமானப்படை.

English summary
Indian Air Force invited applications from unmarried outstanding sportsperson for recruitment to the posts of Airmen in Group 'Y'. The candidates eligible for the post can apply through prescribed format on or before 20 February 2016 i.e., within 21 days from the date of publication of advertisement. Indian Air Force Vacancy Details Name of the Post: Airmen Name of the Sports Disciplines: 1. Athletics 2. Basketball 3. Boxing 4. Cross Country 5. Cricket 6. Cycling 7. Football 8. Gymnastics 9. Hockey 10. Handball 11. Kabaddi 12. Lawn Tennis 13. Shooting 14. Swimming 15. Volleyball 16. Water Polo 17. Wrestling 18. Weight Lifting 19. Golf Eligibility Criteria Educational Qualification: Passed 10+2 or equivalent examination in stream/ subjects approved by Central/ State Boards of Education.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia