இந்திய அஞ்சல் துறையில் வேலை.. விண்ணப்பிக்க ரெடியா?

Posted By:

கேரளா : இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மேன் பணிக்கு 25 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றிய முழு விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய அஞ்சல் துறையில் வேலை.. விண்ணப்பிக்க ரெடியா?

பணியின் பெயர் - போஸ்ட் மேன்

கல்வித் தகுதி - 10ம் வகுப்பு / மெட்ரிக்குலேசன்

காலியிடங்கள் - 25

பணியிடம் - கேரளா

ஊதியம் - ரூபாய் 21,700 - 69,100 / மாதம்

கடைசி தேதி - 25 மார்ச் 2017

தேர்வு மையம் - சிம்லா (தேர்வு மைய விபரம் நுழைவுச் சீட்டில் தெரிவிக்கப்படும்)

கல்வித்தகுதி - அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பணியில் அமர்த்தப்பட்ட பின் முதல் இரண்டு வருடம் தகுதி காண் வருடமாகும்.

வயது வரம்பு - 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு - பொது அறிவுப் பாடத்திட்டத்தில் 25 கேள்விகளும் (பகுதி ஏ) , கணக்குப் பாடத்திட்டத்தில் 25 கேள்விகளும் (பகுதி பி), ஆங்கிலம் பாடத்திட்டத்தில் 25 கேள்விகளும் (பகுதி சி 1), மலையாளம் பாடத்திட்டத்தில் 25 கேள்விகளும் (பகுதி சி 2) கேட்கப்படும்.

பகுதி ஏ மற்றும் பி யில் - ஓசி பிரிவினர் 10 மார்க், ஓபிசி பிரிவினர் 9 மார்க், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் 8 மார்க் எடுக்க வேண்டும்.

பகுதி சி 1 மற்றும் சி2 வில் - ஓசி பிரிவினர் 10 மார்க், ஓபிசி பிரிவினர் 9 மார்க், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் 8 மார்க் எடுக்க வேண்டும்.

40% ஓசி பிரிவினர், 33% எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் மற்றும் 37% ஓபிசி பிரிவினர் மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் - விண்ணப்பப்படிவக்கட்டணம் ரூபாய் 100/- மற்றும் தேர்வுக்கட்டணம் ரூபாய் 400/- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் வசூலிக்கப்படுகிறது. (எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது)

விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 25 மார்ச் 2017ம் தேதிக்குள் அந்தந்த தபால் நிலையத்திற்கு விண்ணப்ப படிவத்தினை அனுப்ப வேண்டும். ரீமோட் ஏரியாவில் உள்ளவர்கள் 30 மார்ச் 2017ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

சம்பா-3 காலியிடங்கள், டேராடூன் -2 காலியிடங்கள், தரம்ஷாலா-2 காலியிடங்கள், ஹமிர்பூர்-5 காலியிடங்கள், மண்டி-5 காலியிடங்கள், சிம்லா-6 காலியிடங்கள், சோலன்-2 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப்படிவத்தினை அனுப்ப வேண்டிய முகவரி -

சம்பா - அத்தியட்சகராக. தபால் நிலையங்கள் சம்பா (தலைமை அஞ்சல் நிலையம்) - 176310
டேராடூன் - அத்தியட்சகராக. தபால் நிலையங்கள், டேராடூன் - 177101 - (தலைமை அஞ்சல் நிலையம்)
தரம்ஷாலா - அத்தியட்சகராக. தபால் நிலையங்கள், தர்மசாலா - (தலைமை அஞ்சல் நிலையம்) 176215
ஹமிர்பூர் - சீனியர் அத்தியட்சகராக தபால் நிலையங்கள், ஹமிர்பூர், (தலைமை அஞ்சல் நிலையம்) - 177001
மண்டி - சீனியர் அத்தியட்சகராக தபால் நிலையங்கள் மண்டி (தலைமை அஞ்சல் நிலையம்) - 175001
சிம்லா - சீனியர் அத்தியட்சகராக. தபால் நிலையங்கள், சிம்லா, (தலைமை அஞ்சல் நிலையம்) - 171001
சோலன் - அத்தியட்சகராக. தபால் நிலையங்கள், சோலன், (தலைமை அஞ்சல் நிலையம்) - 173211

மேலும் விபரங்களுக்கு www.hppostalcircle.gov.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
India Post Office Recruitment 2017: H.P Postal Circle of India Post recruiting Post Man for their circle.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia