சென்னை: இந்தியாவில் தரமான கல்வியை அளிக்க ஒவ்வொரு 7 நிமிடத்துக்கும் ஒரு பள்ளி திறக்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறினார்.
ஃபேஸ்புக் பக்கத்தில் மாணவர்களுடன் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கலந்துரையாடினார். அப்போது இந்தத் தகவலை அவர் பகிர்ந்துகொண்டார்.

அப்போது அவர் மேலும் கூறியதாவது: புள்ளியியல் விவரங்களின்படி இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு 7 நிமிடத்துக்கும் ஒரு புதிய புள்ளியைத் திறக்கவேண்டிய தேவையில் நாம் இருக்கிறோம்.
உலகிலேயே அதிக அளவில் பள்ளிகளை வைத்துள்ள பெருமை நம்மிடம் இருக்கிறது.
குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கும் தரமான கல்வியைத் தரவேண்டி மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசு தரமான கல்வியை வழங்குவதில் உறுதியாக இருக்கிறது. நிச்சயம் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
பெண் குழந்தைகளுக்கு உண்மையாகவே உதவும் ஆண்கள், சிறுவர்களுக்கு நாம் நிச்சயம் விருது தந்து கௌரவிக்கவேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு வகுப்பிலும் பெண் குழந்தைகளை மதிக்கும் ஆண் குழந்தைகளுக்கு பரிசளிக்கவேண்டும்.
அதேபோல வீரதீரமிக்கச் செயல் செய்யும் பெண் குழந்தைகளையும் பள்ளி ஆசிரியர்கள் கௌரவிக்கவேண்டும் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications












