ஆசியாவின் “டாப்” பல்கலைக்கழகங்கள்... சரிவைச் சந்தித்த இந்தியா!

Posted By:

டெல்லி: ஆசியப் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப்பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் மற்ற நாடுகளின் பல்கலைக்கழகங்களை விட மோசமான சரிவினை சந்தித்துள்ளது இந்தியா.

2015 ஆம் ஆண்டுக்கான டைம்ஸ் உயர் கல்வி ஆசிய பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் டோக்கியோ பல்கலைக்கழகம் கடந்த ஆண்டைப் போலவே முதல் இடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

சிங்கப்பூரின் நதிப்னால் பல்கலைக்கழகம் 2 ஆம் இடத்தையும், ஹாங்காங் பல்கலைக்கழகம் 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

சென்ற முறை 31வது இடத்திலிருந்த இந்தியா இம்முறை மேலும் 6 இடங்கள் கீழிறங்கி 37வது இடத்தைப் பிடித்துள்ளது.

பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனம் 37வது இடத்தையும், பஞ்சாப் பல்கலைக்கழகம் 38வது இடத்தையும் பிடித்துள்ளது.

இதுதவிர, அலிகார் முஸ்லீம் பல்கலைகழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம், ரூர்க்கி, மும்பை, டெல்லி, கரக்பூர் மற்றும் மெட்ராஸ் ஆகிய இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் 100 இடங்களுக்குள் உள்ளது.

English summary
Indian universities continue to lag way behind other institutes in a latest ranking of Asian universities that is dominated by varsities from Japan, Singapore, Hong Kong, and China.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia