நாட்டில் மேலும் 64 சட்டக் கல்லூரிகள்: மத்திய அரசு அனுமதி!!

Posted By:

சென்னை: நாட்டில் மேலும் 64 சட்டக் கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதியும், அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் டி.வி. சதானந்தகௌடா அறிவித்துள்ளார்.

நாட்டில் மேலும் 64 சட்டக் கல்லூரிகள்: மத்திய அரசு அனுமதி!!

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த சட்டக் கல்லூரிகள் 2015-16- கல்வியாண்டில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுடன் இணைப்பைப் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நடப்புக் கல்வியாண்டிலேயே இந்த சட்டக் கல்லூரிகளுக்கு சேர்க்கையும் தொடங்கப்படும் என்று அமைச்சர் டி.வி. சதானந்தகௌடா தில்லியில் நிருபர்களிடம் நேற்று தெரிவித்தார்.

நாட்டில் சட்டக் கல்வி முறையை வலுப்படுத்துவதற்காக இந்த அனுமதியை மத்திய சட்டத்துறை அமைச்சகமும், பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவும்(பிசிஐ) வழங்கியுள்ளதாக சதானந்த கௌடா தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக சட்டக் கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்டு 116 விண்ணப்பங்கள் வந்ததாகவும், அதில் தற்போது 64 புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் சதானந்த கௌடா தெரிவித்துள்ளார்.

    English summary
    To strengthen the legal education system in India, the Ministry of Law and Justice and the Bar Council of India (BCI) have cleared 64 new law colleges, which can start their session from the academic year 2015-16.The ministry received over 116 proposals for setting up new colleges in various states, of which 64 colleges have been given affiliation as of now. The ministry and BCI have taken due care in granting affiliation to the colleges as per the Supreme Court’s verdict on checking fake universities before giving nod for admissions.

    உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
    Tamil Careerindia

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more